×

வேதாரண்யம் அருகே இறந்து கரை ஒதுங்கிய ராட்சத டால்பின்

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம்  அடுத்த மணியன் தீவு கடற்கரை பகுதியில் 5 அடி நீளம், சுமார் 200 கிலோ எடையுள்ள டால்பின் மீன் இறந்து கரை ஒதுங்கியது. கோடியக்கரை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்பு  கால்நடை மருத்துவரை வரவழைத்து டால்பினை மருத்துவ பரிசோதனை செய்து கடற்கரை  பகுதியிலேயே புதைத்தனர். முன்னதாக இறந்து கரை ஒதுங்கிய டால்பினை ஏராளமான பொதுமக்கள்  பார்த்து சென்றனர்.
இது போல் நவம்பர், டிசம்பர் மாதங்களில் டால்பின் படகு காற்றாடியில் அடிபட்டும், நீரோட்டத்தின் காரணமாகவும் கடலில் கலக்கும் பல்வேறு கழிவுகள், பிளாஸ்டிக்கை உண்பதாலும் இறந்து விடுகின்றன.

கடந்த 20 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான டால்பின் மீன்கள் வேதாரண்யம் தாலுகா கடல் பகுதி முழுவதும் இறந்து கரை ஒதுங்குவது தொடர்ச்சியாக நடக்கிறது. அழிந்துவரும் இந்த டால்பின் மீன்கனை காப்பாற்றுவது மீனவர் கையில்தான் உள்ளது. கடல் மாசு படாமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Vedaranyam , Giant dolphin dying near Vedaranyam
× RELATED வேதாரண்யத்தில் நாளை உப்பு...