×

ரூ. 6,800 கோடி செலவில் உருவாக்கப்பட்ட ராயல சீமா நீர்ப்பாசனத் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி அவசியம் : பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

ஆந்திர மாநிலம் )சைலம் அணைக்கட்டிலிருந்து ராயலசீமா பகுதியின் குடிநீர், விவசாயம் மற்றும் தொழிற் தேவைக்காக தண்ணீர் கொண்டு செல்ல ரூ. 6,800 கோடி செலவில் உருவாக்கப்பட்ட ராயலசீமா நீர்ப்பாசனத் திட்டம் சுற்றுச்சூழல் அனுமதியின்றி தொடங்கப்பட்டதாலும், இத்திட்டத்திற்கு கிருஷ்ணா நதி மேலாண்மை வாரிய அனுமதியை பெறவில்லை என்பதாலும் திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி தெலங்கானாவை சேர்ந்த கவினொல்லா நிவாஸ் என்பவர் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு பதிவு செய்தார்.இந்நிலையில் இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகம், இது நீர்ப்பாசனத் திட்டம் என்பதால் சுற்றுச்சூழல் துறை அனுமதி அவசியமில்லை என்று தெரிவித்திருந்தது.

இதையடுத்து தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா ஆகியோர் கொண்ட அமர்வு இத்திட்டத்தால் பெரிய அளவிலான நிலப்பரப்பில் சுற்றுச்சூழல் தாக்கம் இருப்பதால் சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை 2006ம் ஆண்டு கீழ் திட்டத்திற்கு அனுமதி அவசியம். ஏற்கெனவே ஸ்ரீசைலம் அணையிலிருந்து செயல்படுத்தப்படும் பிற திட்டங்களை இத்திட்டம் பாதிக்கும் என்பதால் கிருஷ்ணா நதிநீர் மேலாண்மை ஆணையத்திடம் உரிய அனுமதி பெறுவதும் அவசியம் என்று தீர்ப்பளித்தனர். மேலும் உரிய அனுமதி இல்லாமல் மேற்கொண்டு பணிகளை மேற்கொள்ளக்கூடாது எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

Tags :
× RELATED உத்தரபிரதேசத்தில் 5 முறை எம்எல்ஏவாக...