×

ருதுராஜ் தனது திறமையைக் காட்டியுள்ளார்: சென்னை கேப்டன் தோனி பாராட்டு

துபாய்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் துபாயில் நேற்று நடந்த 49வது லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன் எடுத்தது. அதிகபட்சமாக நிதிஷ் ரானா 61 பந்தில் 4 சிக்சர், 10 பவுண்டரிகளுடன் 87 ரன் எடுத்தார். சுப்மான்கில் 26, சுனில் நரேன் 7, ரிங்குசிங் 11,  மோர்கன்  15, தினேஷ் கார்த்திக் 21 ரன் (10 பந்து) எடுத்தனர். ெசன்னை தரப்பில் லுங்கி நிகிடி 2 விக்கெட் எடுத்தார். பின்னர் 173 ரன் இலக் கை துரத்திய சென்னை அணியில், வாட்சன் 14 ரன்னில் வெளியேற ருதுராஜ் கெய்க்வாட்  53 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 72, அம்பதி ராயுடு 20 பந்தில் 38 ரன் அடித்தனர். டோனி 1 ரன்னில் நடையை கட்டினார்.

கடைசி 2 ஓவரில் 30 ரன் தேவைப்பட்ட நிலையில், பெர்குசன் வீசிய 19வது ஓவரில், 20 ரன் அடித்தனர்.  கடைசி ஓவரில், முதல் 5 பந்தில் 9 ரன் எடுக்க. கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட ஜடேஜா சிக்சர் அடித்து வெற்றி பெற வைத்தார். 20 ஓவரில் சென்னை 5 விக்கெட் இழப்பிற்கு 178 ரன் எடுத்து 5 விக்ெகட் வித்தியாசத்தில் வெற்றி ெபற்றது. ஜடேஜா 11 பந்தில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் 31, சாம்கரன் 13 ரன்னில் களத்தில் இருந்தனர். ருதுராஜ் ஆட்டநாயகன் விருது ெபற்றார். 13வது போட்டியில் சென்னை 5வது வெற்றியை பெற்றது. கொல்கத்தா 13வது ஆட்டத்தில் 7வது தோல்வியை சந்தித்தது. இதனால் அந்த அணியின் பிளேஆப் வாய்ப்பு ஏறக்குறைய பறிபோய் விட்டது. ெவற்றிக்கு பின் சென் னை கேப்டன் டோனி கூறியதாவது: திட்டங்கள் எங்களுக்கு ஆதரவாக சென்ற ஒரு விளையாட்டு இது என்று நான் நினைக்கிறேன்.

இந்த சீசனில் ஜடேஜா அருமையாக ஆடினார். டெத் ஓவர்களில் அவர் மட்டுமே அதிரடியாக ஆடினார். அவருடன் வேறு யாராவது தேவை. அது எங்களுக்கு நன்றாக இருந்திருக்கும். ருதுராஜ் தன்னிடம் இருக்கும் திறமையைக் காட்டியுள்ளார். இவர் திறமையான இளைஞர்களில் ஒருவர். அவர் அதிகம் பேசும் ஒருவர் அல்ல. இவர் முதல் போட்டியில் ஆடியபோது முதல் பந்திலேயே வெளியேறினார். திறமையை நிரூபிக்க ஒருவாய்ப்பு மட்டும் போதாது. அவர் தனது வாய்ப்புகளை எவ்வாறு கைப்பற்றினார் என்பது மிகவும் உற்சாகமானது என்று நான் நினைக்கிறேன். நாங்கள் அடுத்த கட்டத்திற்கு தகுதி பெறும் நிலையில் இல்லை, ஆனால் வரும் பருவங்களில் எங்களுக்காக விளையாடக்கூடிய நபர்களைப் பற்றிய ஒரு பார்வை எங்களுக்கு கிடைத்துள்ளது, என்றார்.

கொல்கத்தா கேப்டன் மோர்கன் கூறுகையில், டாசை இழந்தாலும் நாங்கள் கொஞ்சம் நன்றாக ஆடினோம். சவாலான இலக்கை தான் எடுத்தோம்.ஆனால் பந்துவீச்சின் போது 8வது ஓவரில் இருந்தே பனி இருந்தது உண்மையிலேயே சவாலானது. இருப்பினும் பந்துவீச்சாளர்கள் போராடினர், என்றார்.

ஜிம்மில் கடினமாக உழைக்கிறேன்
ஆட்டநாயகன் ருதுராஜ் கூறுகையில், நன்றாக பேட்டிங் செய்தேன். இதனால் நம்பிக்கை அதிகரித்துள்ளது. நான் முதலில் ஆடிய 2 போட்டியிலும் ரன் எடுக்காதது அணிக்கு நெருக்கடியான நிலைதான். கொரோனா என்னை கடினமாக்கியுள்ளது. கேப்டன் சொல்வது போல், ஒவ்வொரு சூழ்நிலையையும் புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள். நான் நேர்மறையாக இருந்தேன், எதிர்காலத்தைப் பற்றி அதிகம் சிந்திக்கவில்லை. நான் ஜிம்மில் கடினமாக உழைக்கிறேன், என்னிடம் ஒரு சிக்ஸ் பேக் உள்ளது.

Tags : Rudraj ,Dhoni ,Chennai , Rudraj has shown his talent: Chennai captain Dhoni praised
× RELATED எம்.எஸ்.தோனி இந்தியாவுக்கு கிடைத்த...