×

ராஜஸ்தானுடன் இன்று மோதல்: பிளேஆப் வாய்ப்பை தக்கவைக்குமா பஞ்சாப்?

அபுதாபி: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அபுதாபியில் இன்று நடக்கும் 50வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. பஞ்சாப் 12 போட்டியில் 6ல் வென்றுள்ளது. கடைசியாக ஆடிய 5 போட்டிகளிலும் வென்று சூப்பர் பார்மில் உள்ளது. இன்று வெற்றி பெற்று பிளேஆப் வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள போராடும். மறுபுறம் ராஜஸ்தான் 12 போட்டியில் 5ல் வென்றுள்ளது. ரன்ரேட்டும் குறைவாக உள்ளதால் எஞ்சிய 2 போட்டியிலும் வெற்றி பெற்றாலும் மற்ற அணிகளின் முடிவை பொறுத்தே பிளே ஆப் வாய்ப்பு உள்ளது.

இதனால் இன்று அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றிபெற முயலும். இருஅணிகளும் இதுவரை 20 போட்டிகளில் மோதி உள்ளன. இதில் 8ல் பஞ்சாப், 11ல் ராஜஸ்தான் வென்றுள்ளது. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது. கடந்த செப். 27ம் தேதி மோதிய போட்டியில் ராஜஸ்தான் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Tags : Conflict ,Rajasthan ,Punjab , Conflict with Rajasthan today: Will Punjab retain playoff chances?
× RELATED 2024 ஐபிஎல் டி20: டெல்லி அணிக்கு எதிரான...