×

இலங்கை கடற்படை அட்டகாசம் தொடர்கிறது; மீனவர்கள் விரட்டியடிப்பு...!! நஷ்டத்துடன் கரைதிரும்பியதால் சோகம்

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படை விரட்டியடித்ததால், ராமேஸ்வரம் மீனவர்கள் குறைந்தளவு மீன்பாடுடன் கரை திரும்பினர். கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை கடற்படையினர் மீண்டும் தொடர் அத்துமீறல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மீன்பிடி வலைகளை வெட்டி கடலில் வீசுவது, கல், பாட்டில்களை எறிந்து தாக்குவது போன்ற அடாவடிகளில் ஈடுபடுகின்றனர். தற்போது பாக் ஜலசந்தி கடலில் இந்தியா - இலங்கை கடல் எல்லைப்பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட இலங்கை கடற்படை கப்பல்கள் அணிவகுத்து நிறுத்தப்பட்டுள்ளன. கப்பலில் இருந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் இலங்கை கடற்படையினர் வாட்டர் ஸ்கூட்டர், சிறிய விரைவு படகு போன்றவற்றின் மூலம் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ராமேஸ்வரத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு சென்றனர். பகல் 12 மணிக்கு மேல் மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் படகில் சென்றபோது அங்கு 10க்கும் மேற்பட்ட இலங்கை கடற்படை கப்பல்கள் நிற்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து அதற்கு மேல் செல்லாமல் மீன்பிடிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஒரு சில படகுகளும் இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்டன. இரவு முழுவதும் இதேநிலை நீடித்ததால் ஆழம் குறைந்த பகுதிகளில் மட்டும் மீன்பிடித்து நேற்று காலை கரை திரும்பினர். இதனால், படகுகளில் மீன்வரத்து குறைவாக இருந்தது. இறால் உட்பட அதிக விலைக்கு விற்பனையாகும் பலவகை மீன்களும் எதிர்பார்த்த அளவிற்கு பிடிபடவில்லை. இதனால் அதிகளவில் நஷ்டம் ஏற்பட்டதாக படகு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

Tags : Sri Lankan ,Fishermen , Sri Lankan naval aggression continues; Fishermen chase ... !! Tragedy returning with loss
× RELATED இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஷூ வாங்கி தராததால் வாலிபர் தற்கொலை