×

இந்தியாவில் முடிவுக்கு வந்தது பப்ஜி...!! பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் முற்றிலுமாக தடை

டெல்லி: இந்தியாவில் இன்று முதல் பப்ஜி விளையாட்டிற்கு முற்றிலுமாக தடை விதிக்கப்படுகிறது. பிளே ஸ்டோரில் பப்ஜி நீக்கப்பட்டிருந்த நிலையில், ஏற்கனவே பதிவிறக்கம் செய்தவர்களுக்கும் இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், பப்ஜி உள்ளிட்ட 117 சீன செயலிகளுக்கு அண்மையில் தடை விதித்தது. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்தான் தடைக்குக் காரணம் என்று சொல்லப்பட்டது. முன்னதாக ஜூன் மாதம், டிக் டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளும், ஜூலை மாதம் 47 செயலிகளும் தடை செய்யப்பட்டன.

இந்த நிலையில், சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக உள்ள பப்ஜி மொபைல் கேம், கட் கட், பைடு, ரைஸ் ஆப் கிங்டம்ஸ் ,கேரம் ஃப்ரண்ட்ஸ் உள்ளிட்ட மேலும் 118 சீன செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காகவும், பொது ஒழுங்கை கருத்தில் கொண்டும் இந்த தடை உத்தரவு பிறபிக்கப்படுவதாக மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் தெரிவித்தது. பப்ஜி விளையாடுவதால் இளைஞர்கள் மனஅழுத்தத்துக்கு ஆளாகி வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

மேலும், இதுபோன்ற செயலிகள் நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன என்பதும் தெரிய வந்தது. பப்ஜி விளையாட்டு ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் வலைதளங்கள் மூலமாகவும், வேறு வகையிலும் சிலர் பப்ஜி விளையாட்டை தரவிறக்கி விளையாடி வந்தனர். இந்நிலையில் பப்ஜி விளையாட்டை முழுவதுமாக தடை செய்யும் நடவடிக்கையில் இறங்கிய மத்திய அரசு பப்ஜி விளையாட்டு செயலி கிடைக்கும் மறைமுக சர்வர்களையும் முடக்கியுள்ளது.

இதனால் தற்போது இந்தியாவில் பப்ஜி முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பப்ஜி, 60 கோடி முறைகளுக்கும் மேல் சர்வதேச அளவில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. 5 கோடி பேர் தொடர்ந்து இந்த விளையாட்டை விளையாடி வருகின்றனர். இதில் அதிகபட்சமான பதிவிறக்கங்கள் இந்தியாவிலிருந்துதான். இந்தியாவில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இந்த விளையாட்டு மிக மிகப் பிரபலம். அதுவும் இந்த கோவிட் நெருக்கடி, ஊரடங்கு காலகட்டத்தில் இந்தியாவில் பப்ஜி 17.5 கோடி முறை பதிவிறக்கம் செய்யப்பட்டு இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது.


Tags : Babji ,India ,Play Store , Pubg came to an end in India ... !! Completely banned from today after being removed from the Play Store
× RELATED 10 இந்திய செயலிகளை கூகுள் ப்ளே ஸ்டோரில்...