ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் இரும்பு மிதவையுடன் கூடிய கிரேன் மோதியது

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் இரும்பு மிதவையுடன் கூடிய கிரேன் மோதியது. இதையடுத்து சென்னையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கிச் சென்ற விரைவு ரயில் மண்டபத்தில் நிறுத்தப்பட்டது.பாம்பனில் புதிய பாலம் அமைப்பதில் கிரேன் அமைத்து கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.நள்ளிரவில் வீசிய பலத்த காற்று, கடல் சீற்றம் காரணமாக கிரேன் பாலத்தில் மோதியது.பாலத்தில் மோதிய கிரேனை படகுகள் மூலம் மீட்கும் முயற்சியில் பொறியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories:

>