×

குஜராத் முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் மரணம்

அகமதாபாத்: குஜராத் முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் நேற்று காலமானார். பாஜ மூத்த தலைவர்களில் ஒருவர் கேசுபாய் படேல். வயது 92. குஜராத்தில் 1995, 1998-2001 ஆண்டுகளில் முதல்வராக இருந்துள்ளார். ஏற்கனவே பல்வேறு  உடல்நிலை கோளாறால் அவதிப்பட்டு வந்த அவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்றும் ஏற்பட்டது. அதில் இருந்து மீண்டு வந்த நிலையில், அவருக்கு நேற்றுக் காலை உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அகமதாபாத்தில் உள்ள  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு இதயத் துடிப்பு, ஆக்சிஜன் அளவு குறைந்ததால் உடல்நிலை மிகவும் மோசமானது.

பின்னர், மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்தார். அவருடைய மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவர் 2001ல் முதல்வர் பதவியில் இருந்து விலகிய பிறகுதான் மோடி, குஜராத்  முதல்வரானார். பிரதமர் மோடி தனது டிவிட்டரில், `அன்புக்கும் மரியாதைக்கும் உரிய கேசுபாய் படேல் மறைவினால் மிகுந்த துயருற்றேன். சமுதாயத்தின் அனைத்து பிரிவு மக்கள் மீதும் அக்கறை கொண்ட தன்னிகரில்லா தலைவர் ,’ என்று  கூறியுள்ளார்.

Tags : Keshubhai Patel ,Gujarat , Former Gujarat Chief Minister Keshubhai Patel dies
× RELATED மீண்டும் பாஜ ஆட்சிக்கு வந்தால் 2024...