கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் போக்சோவில் விரிவுரையாளர் கைது

சென்னை: கல்லூரி மாணவிக்கு திருமண ஆசைகாட்டி பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட தனியார் கல்லூரி விரிவுரையாளரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். சென்னை அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண், அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். அந்த கல்லூரியில் விரிவுரையாளராக, வில்லிவாக்கத்தை சேர்ந்த லோகேஷ் (26) பணிபுரிந்து வருகிறார்.மாணவி பாடத்தில் சந்தேகம் கேட்க வரும்போது,  லோகேஷுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, மாணவியிடம் திருமண ஆசைவார்த்தை கூறிய லோகேஷ், அவரிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு  வந்திருக்கிறார்.

இதற்கிடையே, லோகேஷுக்கும் வேறொரு பெண்ணுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து உள்ளது. இதனையடுத்து லோகேஷ் அந்த மாணவியிடம் பேசுவதை தவிர்த்துள்ளார். இதுபற்றி கேட்ட மாணவியை மிரட்டி, விரட்டி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.இதையடுத்து, தன்னிடம் கல்லூரி விரிவுரையாளர் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்ததாக, தனது பெற்றோரிடம் மாணவி தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, போக்சோ சட்டத்தின்கீழ் லோகேஷை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>