திருமண மண்டபத்தில் மொய்ப்பணம் திருடிய ஆசாமிக்கு வலை

கும்மிடிப்பூண்டி: ஊத்துக்கோட்டை மாம்பாக்கம் பகுதியை சேர்ந்த நவீன் (26), ஆந்திர மாநிலம் தடா பகுதியை சேர்ந்த பிந்து (21) ஆகிய இருவருக்கும் நேற்றுமுன்தினம்  கவரப்பேட்டை உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்களுக்கு உறவினர் மற்றும் நண்பர்கள் மொய்ப்பணம் கொடுத்து வந்தனர்.  மொய்ப்பணம் வாங்கி கொண்டிருந்தவர்களிடம் அங்கிருந்த ஒரு மர்ம நபர் சுமார்  1 லட்சத்தை பறித்துச் சென்றார். அந்த மர்ம நபரை பிடிக்க சென்றபோது தப்பியோடிவிட்டார்.  மணமகன் வீட்டார் கவரப்பேட்டை காவல் நிலைத்தில் புகார் செய்தனர்.

Related Stories:

>