×

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து திமுக கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில் கூட்டத்தில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து தீர்மானம் கொண்டு வர திமுகவை சேர்ந்த கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு துணை தலைவர் மாலதி குணசேகர் பேசினார். இதற்கு ஆதரவு தெரிவித்து திமுக கவுன்சிலர்கள் இந்திரா திருமலை, ஜோதி, சிவா உள்ளிட்ட திமுக கவுன்சிலர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் ரவிக்குமார் கூட்டத்தில் பேசினர்.ஆனால் இந்த தீர்மானத்தை நிறைவேற்ற இயலாது என கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார் உறுதியாக கூறிய நிலையில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 14 கவுன்சிலர்கள் மற்றும் 2 மாவட்ட கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது கூட்டத்தில் இருந்து வெளியேறி மத்திய மாநில அரசுகளை கண்டித்து  கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் மாலதி குணசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர்கள் ராமஜெயம், சாரதா முத்துசாமி , திமுக கவுன்சிலர்கள் சிட்டிபாபு, ஜெயச்சந்திரன், அமலா சரவணன், சிவா, ஜெயந்தி, பாசம் அன்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் ரவிக்குமார், காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் மதன்மோகன் உள்ளிட்ட 14 பேர் கவுன்சிலர்கள் 2 மாவட்ட கவுன்சிலர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.



Tags : councilors ,DMK ,government , Condemning the agricultural laws of the Central Government DMK councilors protest
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி