×

கோயில் கும்பாபிஷேகம்

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை அடுத்த ராகவநாயுடுகுப்பம் ஊராட்சி ராமபத்திரகண்டிகை கிராமத்தில் வரசித்தி விநாயகர் மற்றும்   கங்கையம்மன் கோயில் மஹா கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி மூன்று நாட்கள் திருக்கோயில் வளாகத்தில்  ஹோம குண்டங்கள் அமைத்து யாக சாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை 11 மணி அளவில் மஹா பூர்ணாஹுதி ஹோம பூஜைகள் தொடர்ந்து கிராம மக்கள் மத்தியில்  நாதஸ்ர வாத்தியங்கள் முழங்க கலசங்கள் புறப்பட்டு  கங்கையம்மன் கோயில் கோபுர கலசத்திற்கும், இதனையடுத்து, விநாயகருக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது.

விழாவில், ஊராட்சி மன்ற தலைவர் ஆரியம்மாள் உட்பட் முக்கிய பிரமுகர்கள், கிராம மக்கள் பெரும் திரளாக கலந்துகொண்டனர். பக்தர்களுக்கு திருக்கோயில் சார்பில் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கிராமமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags : Temple Consecration
× RELATED கொடுமுடி அருகே பரிதாபம்: கார்...