×

ஒரே நாளில் ஒபாமா; உலக நாடுகள் வரை பரபரப்பான பெரம்பலூர் டைனோசர் முட்டைகள்: சமூக வலைதளங்களில் பிரபலமான மீம்ஸ்கள்

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உள்ள குன்னம் ஏரியில் கடந்த 21ம் தேதி ஏரி குடிமராமத்து பணிகள் நடந்தபோது முக்கால்அடி முதல் ஒருஅடி வரையிலான விட்டம் கொ ண்ட 80க்கும் மேற்பட்ட வெளிர் மஞ்சள்நிற உருண்டைகள் மண்ணில் புதையுண்டு கிடந்தது தெரியவந்தது. இது 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்ந்து அழிந்து போன டைனோசர் கள் முட்டைகள் என தகவல் வெளியானதால் மிக பெரிய பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி நேரில் ஆய்வு செய்த திருச்சி அரசு அருங்காட்சிய காப்பாட்சியர் சிவகுமார் குன்னம் பகுதியில் கண்டறியப்பட்டது டைனோசர் முட்டைகள் கிடையாது என தெரிவித்துள்ளனர்.

இது பற்றி நாளிதழ்கள், தொலைக் காட்சிகள் மட்டுமன்றி பேஸ்புக், வாட்ஸ்அப், டுவிட்டர், ஷேர்ஷாட், இன்ஸ்டா கிராம், டெலிகிராம் என சமூக ஊடகங்கள் அனைத்திலும் அதிகம் கவரப்பட்ட, பரப்பப்பட்ட செய்தியாக மாறிப்போய் பெரம்பலூரை  கலாய்த்து கந்தலாக்கி விட்டனர். குறிப்பாக குன்னத்தில் குவியல் குவியலாக டைனோசர் முட்டைகள் என செய்தி வந்ததும், ஆடுமாடுகளை பட்டியில் கட்டிவைத்து வளர்ப்பதுபோல், பெரம்பலூர் மாவட்டத்துக்காரர்கள் டைனோசர்களை பட்டியில் கட்டிவைத்து வளர்த்தவர்கள் போல வடிவேலு படத்துடன் மீம்ஸ் வெளியானது. பிறகு வடிவேலு கண்ணாத்தா படத்தில் ஆடு திருடிச்செல்லும்போது தோளில் சுமந்த ஆட்டுக்குட்டியிடம் “ஏன் கத்துற” எனக் கேட்பதுபோல் டைனோசர் குட்டியை திருடிச் செல்வதுபோல் மீம்ஸ்கள் கலகலக்க வைத்தன.

பிறகு வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் சிவகார்த்திகேயனிடம் மாட்டை மேய்த்து வரச்சொல்லி மொட்டை ராஜேந்திரன் பேசுவதுபோல் டைனோசரை மேய்த்துவர சொல்லும் படத்துடன் மீம்ஸ் வெளியானது. பிறகுஆரோக்கியா பால் விளம்பரத்தில் காத்து, இயற்கை, மாடு என்பதற்குபதில் காத்து, இயற்கை, டைனோசர் குட்டிங்க வேறென்ன வேணும் என மாற்றி மீம்ஸ்கள் வந்து தெறிக்கவிடப்பட்டது. தொடர்ச்சியாக ஒருபடி மேலேபோய் பெரம்பலூர்காரங்க ஜல்லிக்கட்டுக்கு மா ட்டுக்கு பதில் டைனோசர்களை அடக்குவது போல, ஹாலிவுட் டைரக்டர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் அமைத்த ஜூராசிக் பார்க் பெரம்பலூரில் இருப்பதுபோல, பெரம்பலூர்- அரியலூர் சாலையில் பஸ்சில் செல்லும் போது, ஆடுமாடுகள் குறுக்கே செல்வதுபோல் டைனோசர்கள் குறுக்கே கூட்டம் கூட்டமாக ஓடுவது,

சாப்பாட்டு விருந்தில் கிரில் சிக்கன் என முழு கோழியை வறுத்து வைத்திருப்பதுபோல், கிரில் டைனோசர்களை சாப்பாட்டுடன் இலையில் வைத்திருக்கும் காட்சிகள் என மீம்ஸ்களை, கிராபிக் காட்சிகளை வெளியிட்டு கலாய்க்கப்பட்டது. இதனால் மதுரைனா ஜல்லிக்கட்டு, திண்டுக்கல்னா பூட்டு, சேலம்னா மாம்பழம், பழனின்னா பஞ்சாமிர்தம், திருவாரூர்னா தேரு, திருநெல்வேலின்னா அல்வான்னு சொல்லுறதைப் போல பெரம்பலூர்னா டைனோசர்னு பேசும் அளவுக்கு பிர பலமாகிப் போய்விட்டது. தொடர்ந்து, இந்த முட்டைகளை வைத்து கலாய்த்து வருவதால் பெரம்பலூர் ஒரே நாளில் ஒபாமா ரேஞ்சுக்குப் பேசும் பொருளாகி விட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Obama ,world ,Perambalur , Obama in one day; Perambalur dinosaur eggs exciting all over the world: Popular memes on social websites
× RELATED தண்ணீரை விலை கொடுத்து வாங்குவது நூற்றாண்டின் மிகப்பெரும் அவலம்