×

நவம்பர் 15-ம் தேதியன்று மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படும் என அறிவிப்பு..!!

பம்பை: மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைக்கு நவம்பர் 15-ம் தேதி மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து, சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜையையொட்டி நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. மேலும், ஒவ்வொரு தமிழ் மாதத்தின் தொடக்கத்தில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

முன்னதாக, ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு தளர்வை அறிவித்த மத்திய அரசு, வழிபாட்டு தலங்களை திறக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், கேரளாவில் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, ஐப்பசி மாத பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 7 மாத இடைவெளிக்குப் பிறகு தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். நாளை முதல் ஐந்து நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் 250 பேர் அனுமதிக்கப்படுகின்றனர்.

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கேரள அரசு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைக்கு நவம்பர் 15-ம் தேதி மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நவம்பர் 16-ம் தேதி முதல் டிசம்பர் 26-ம் தேதி வரை மண்டல பூஜைக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Announcement ,Sabarimala Iyappan Temple Walk ,Mandala Puja ,Makaravilakku , Sabarimala Iyappan Temple, Mandala Puja, Makaravilaku Puja
× RELATED மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைக்கு...