மீனம்பாக்கம்: சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து அந்தமான் செல்லும் ஏர் இந்தியா விமானம் இன்று காலை 5.10 மணிக்கு புறப்பட்டது. விமானத்தில் 181 பயணிகள், 5 விமான ஊழியர்கள் என மொத்தம் 186 பேர் இருந்தனர். நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுப்பிடித்தார். உடனே அவசரமாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறங்குவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் துரிதமாக செய்யப்பட்டன.