குஜராத் முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் மறைவிற்கு ஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் இரங்கல்.!!!

அகமதாபாத்: குஜராத் முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் மறைவிற்கு ஜனாதிபதி, பிரதமர், மத்திய அமைச்சர்கள், குஜராத் முதல்வர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே நீண்ட  உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குஜராத் முன்னாள் முதல்வர் கேசுபாய் படேலுக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்.  இந்நிலையில், நேற்று திடீரென கேசுபாய் படேலுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து அகமதாபாத்தில் உள்ள ஸ்டெர்லிங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இருப்பினும், சிகிச்சை பலனின்றி கேசுபாய் படேல் இன்று காலை 11.50 மணியளவில் காலமானார். இந்நிலையில், கேசுபாய் படேல் மறைவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், குஜராத் முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்:

குஜராத் முன்னாள் முதல்வரான கேசுபாய் படேலின் மறைவுடன், தேசம் ஒரு உறுதியான தலைவரை இழந்துள்ளது. அவரது நீண்ட பொது வாழ்க்கை மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த அர்ப்பணிக்கப்பட்டது, குறிப்பாக கிராமங்களில். விவசாயிகளின் காரணங்களின் சாம்பியனாக, அவர் வெகுஜனங்களுடன் அசாதாரண உறவை அனுபவித்தார். சமூக சேவைக்கான கேசுபாய் ஜியின் உறுதியும், இந்திய நெறிமுறைகளுக்கான அர்ப்பணிப்பும் அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்கும். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இரங்கல் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி டுவிட்:

பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “நம்முடைய அன்புக்குரிய, மதிப்புக்குரிய தலைவர் கேசுபாய் படேல் காலமாகிவிட்டார். அவரின் மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த வேதனையும், வருத்தமும்  அடைகிறேன். சமூகத்தில் ஒவ்வொரு பிரிவினரின் முன்னேற்றத்துக்கும் பங்காற்றிய சிறந்த தலைவர். குஜராத் மாநில முன்னேற்றத்துக்கும், மக்கள் நல்வாழ்வுக்கும் தனது வாழ்வை அர்ப்பணித்தவர்” எனத் தெரிவித்துள்ளார்.

அமித்ஷா டுவிட்:

குஜராத் முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் மரணம் குறித்து சோகமான செய்தி கிடைத்தது. அவரது நீண்ட பொது வாழ்க்கை குஜராத் மக்களின் சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்டது. கேசுபாய் இறந்தவுடன், குஜராத் அரசியலில் இதுபோன்ற காலியிடங்கள் உள்ளன, அவை நிரப்ப எளிதானது அல்ல. அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கல் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ராஜ்நாத் சிங் டுவிட்:

கேசு பாய் படேல் ஜி ஒரு திறமையான நிர்வாகியாக இருந்தார், அவர் பொது வாழ்க்கையில் ஒரு அழியாத அடையாளத்தை வைத்திருந்தார். புறப்பட்ட தலைவருக்கு எனது அஞ்சலி செலுத்துகிறேன். துக்கத்தின் இந்த நேரத்தில், அவரது குடும்பத்தினருக்கும் நலம் விரும்பிகளுக்கும் எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி.

ஸ்ரீ கேசுபாய் படேல் மக்களுக்கு சேவை செய்வதற்கான உறுதியற்ற அர்ப்பணிப்புக்காக எப்போதும் நினைவுகூரப்படுவார். குஜராத்தின் முன்னாள் முதலமைச்சர் கேசு பாய் ஒரு அரசியல் தலைவராக இருந்தார், அவர் மாநிலத்தில் பாஜகவை வலுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தார். இன்று அவரது மறைவால் ஆழ்ந்த வேதனை அளிக்கிறது என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி இரங்கல்:

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி கூறுகையில், “ ஜனசங்கம், பாஜகவின் தலைசிறந்த தலைவர் கேசுபாய் படேல் இன்று காலமாகிவிட்டார். தேசத்துக்காகவும், விவசாயிகளுக்காகவும் தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர். அவரின் மறைவு  பாஜகவுக்குப் பெரும் இழப்பு” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>