×

கிளியூர் சாலை புதுப்பிக்கும் பணிக்காக கல்லணை கால்வாய் கரையோரம்: மண் எடுப்பதால் உடையும் அபாயம்: பொதுமக்கள் குற்றச்சாட்டு

திருவெறும்பூர்: திருவெறும்பூர் அருகே உள்ள கிளியூரில் இருந்து கல்லணை செல்லும் சாலை புதுப்பிக்கும் பணிக்காக ஆற்றின் கரையோரங்களில் உள்ள மண்ணை எடுப்பதால் ஆற்றின் கரை உடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். திருவெறும்பூர் அருகே உள்ள கிளியூரில் இருந்து கல்லணை வழியாக திருச்சி உள்ளிட்ட மற்ற பகுதிக்கு செல்லும்பொது மக்களும், அதேபோல் கல்லணை பகுதியில் இருந்து கிளியூர் வழியாக துவாக்குடி, திருவெறும்பூர் பகுதிகளுக்கு செல்லும் சாலையுமான கல்லணை-கிளியூர் சாலை மிகவும் மோசமாக இருந்தது இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில் இந்த சாலையை புதுப்பிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் தஞ்சை மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு கல்லணையில் இருந்து கிளியூர் செல்லும் சாலையில் புதுப்பிக்கப்பட்டது. ஆனால் தஞ்சை எல்லைக்கு உட்பட்ட பகுதி மட்டுமே புதுப்பிக்கப்பட்டது. மீதமுள்ள 2 கிலோ மீட்டர் தூரம் திருச்சி மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதியாக அமைந்தது இதனால் அந்த பகுதியில் உள்ள சாலை புதுப்பிக்கப்படாமல் இருந்தது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் அந்த சாலையை புதுப்பித்து தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தநிலையில் அந்த சாலையை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அப்படி சாலையை புதுப்பிக்கும்போது சாலையில் போடப்பட்டுள்ள ஜல்லிகள் மழை பெய்தால் கரைந்து போடாமல் இருக்க சாலையின் இரு புறங்களிலும் மண் அணைக்க வேண்டும் இந்த நிலையில் வெளியிலிருந்து மண் கொண்டுவந்து அணைக்காமல் அந்த கரையோரம் இருபுறமும் உள்ள மண்ணை ஜேசிபி இயந்திரம் மூலம் கரையை பறித்து அனைத்துள்ளனர். இதனால் கல்லணை கால்வாய் மற்றும் வெண்ணாறுக்கு இடையில் கிளியூர் கால்லணை செல்லும் சாலை உள்ளதால் கல்லணை கால்வாய் தண்ணீர் அதிகமாக வரும் பொழுது கரை உடைப்பு ஏற்கும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் அஞ்சுகின்றனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் கேட்டதற்கு சரியான பதில் இல்லை என்றும் கிளி ஊரை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி சங்கிலிமுத்து இது சம்பந்தமாக திருச்சி கலெக்டரிடம் புகார் கொடுத்துள்ளதாகவும், ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை என்று வேதனையுடன் கூறினார்.

Tags : canal bank ,Kallanai ,road , Cleore Road, Fort Canal, Public, Charge
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...