×

வலிமையான இந்தியா மட்டுமல்ல, பசுமையான இந்தியாவும் நமக்குத் தேவை: குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு!!

டெல்லி : வளர்ச்சியும், சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பும் ஒன்றோடொன்று கைகோர்த்திருக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு இன்று கூறினார். இந்திய தொழில் கூட்டமைப்பின் பசுமை கட்டிடங்கள் மாநாடு 2020-ஐ மெய்நிகர் முறையில் துவக்கி வைத்து பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் அனைத்துப் புதிய கட்டிடங்களும் சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்த வகையில் கட்டப்படுவதை கட்டாயமாக்குவதை பரிசீலிப்பதற்கான நேரம் வந்து விட்டதென குறிப்பிட்ட அவர், வலிமையான இந்தியா மட்டுமல்ல, பசுமையான இந்தியாவும் நமக்குத் தேவை என்றார். வரி சலுகைகள் மற்றும் இதர நடவடிக்கைகளின் மூலம் பசுமைக் கட்டிடங்களை ஊக்குவிக்குமாறு அரசுகள், நிதி ஆணையங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை அவர் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், புதிய கட்டிடங்கள் மட்டுமல்ல, பழைய கட்டிடங்களும் சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்த வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும். மின்சார சிக்கனமும், தண்ணீர் சேமிப்பும் ஊக்கப்படுத்தப்பட வேண்டும்.பசுமைக் கட்டிடங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். பருவநிலை மாற்றம் என்பது உறுதியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, அதை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் தேவை. உள்ளூரில் தயாரிக்கப்பட்ட, சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்தப் பொருட்களை கட்டிடங்களின் கட்டுமானத்தில் பயன்படுத்த வேண்டும், என வலியுறுத்தினார். பசுமையான, சுகாதாரமான, வளமான இந்தியாவை கட்டமைக்க அரசுகளுடன் கட்டுமானத் துறை இணைந்து பணிபுரிய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Tags : speech ,Venkaiah Naidu ,India ,Republican , Green, India, Republic, Vice President, Venkaiah Naidu
× RELATED வெங்கையாநாயுடு, மிதுன்...