×

குடிதண்ணீர் வழங்க கோரி சிங்கம்புணரி தாலுகா அலுவலகம் முற்றுகை

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே கரியாம்பட்டி கிராமம் பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. மேலும் இரவு 12 மணிக்குதான் முறையாக மின்சாரம் வருவதாகவும், இதனால் 1 மணிக்கு  தண்ணீர் திறக்கப்படுவதால் பொதுமக்கள் விழித்திருந்து அச்சத்துடன் தண்ணீர் பிடித்து  வருகின்றனர். இதனால் தூக்கமின்றி அவதியடைந்து வருகின்றனர். மேலும் தர்மபட்டியில் ரேசன்கடை உள்ளதால் 6 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பொருட்கள் வாங்க வேண்டிய நிலை உள்ளது.

இங்கு பகுதிநேர ரேசன்கடை திறக்க வேண்டும் என்றனர். கிராம மக்கள் கூறும் போது, திருச்சி மாவட்ட எல்லையில் எங்கள் ஊர் உள்ளதால் யாரும் கண்டுகொள்வதில்லை. கடந்த ஆறு மாதமாக புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தர்மபுரி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பல முறை தண்ணீர் கேட்டு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றனர். இந்நிலையில் நேற்று சிங்கம்புணரி தாலுகா அலுவலகத்தில் ரேஷன் கார்டு, ஆதார் கார்டுகளை ஒப்படைக்கப் போவதாக கூறி அக்கிராம மக்கள் வந்தனர். அவர்களிடம் தாசில்தார் திருநாவுக்கரசு கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டு விரைவில் தண்ணீர் வசதி செய்து தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

Tags : Singampunari , Singampunari, taluka office, siege
× RELATED மது விற்றவர் கைது