×

தொடர் மழையால் நிரம்பும் கண்மாய்கள்: விவசாய பணிகள் தீவிரம்

மானாமதுரை: மானாமதுரை பகுதியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக கண்மாய், குளங்கள் நிரம்பி வருகின்றன. இதனால் இந்தாண்டும் விவசாய பணிகளில் விவசாயிகள் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர். மானாமதுரையில் வைகை ஆற்றில் இருந்து வரும் நீர் வலது இடது பிரதான கால்வாய்களில் பிரிக்கப்பட்டு திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி தாலுகாக்களில் உள்ள 500க்கும் மேற்பட்ட கண்மாய், குளங்களை நிரப்புகிறது. இதுதவிர கிராமங்களை சுற்றிலும் உள்ள கண்மாய்கள், குளங்கள் பருவமழையால் நிரம்புவது வழக்கம். இதன் மூலமும் விவசாய பணிகள் நடந்து வருகிறது.

சூரக்குளம், மணக்குளம், சி.குருந்தங்குளம், நவத்தாவு, பட்டத்தரசி, சன்னதிபுதுக்குளம், பூக்குளம், கீழக்கொம்புக்காரனேந்தல், பனிக்கனேந்தல், தெற்குசந்தனூர், எஸ்.காரைக்குடி உள்ளிட்ட இருநூறுக்கும் மேற்பட்ட கிராமங்களில் கண்மாய் பாசனம் மூலம் விவசாயப் பணிகள் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு பெய்த மழை காரணமாக வானம் பார்த்த பூமியில் கூட சாகுபடி பணிகள் சிறப்பாக நடந்து எதிர்பார்த்த லாபம் கிடைத்தது.

அதேபோல் இந்தாண்டும் பருவமழையால் மானாமதுரையில் குளங்கள், கண்மாய்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. இது குறித்து விவசாயி கருப்பு கூறுகையில், மழை பெய்து வரத்து கால்வாய்கள் மூலம் தண்ணீர் கண்மாய், குளங்களுக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் வயல்களில் நாற்று நடவுப்பணி தீவிரமடைந்துள்ளது. கண்மாய் முழுமையாக நிரம்பினால் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். அதனால் இந்த வாரம் மூன்று முறை பெய்த மழையும் நாற்றாங்காலுக்கு உகந்ததாக உள்ளது. இதனால் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.

Tags : Continuous rain, eyelids
× RELATED திருத்தணி கோயிலில் 22 நாட்களில்...