×

ஒட்டன்சத்திரத்தில் செங்காந்தள் மலர் சீசன் ஆரம்பம்: உற்சாகமாக பயிரிடும் விவசாயிகள்

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பகுதியில் செங்காந்தள் மலர் எனப்படும் கண்வலி கிழங்கு நடும் பணி தற்போது தீவிரமடைந்துள்ளது.
மாநில மலரான செங்காந்தள் மலரை ஒட்டன்சத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.  வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே சாகுபடி செய்யப்படும் செங்காந்தள் பயிர் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கி உள்ளதால் ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளான அம்பிளிக்கை, கள்ளிமந்தயம், மார்க்கம்பட்டி, இடையகோட்டை, கரியாம்பட்டி, கூத்தம்பூண்டி, கே.டி.பாளையம்,  பெரியகோட்டை, கொத்தயம் ஆகிய பகுதிகளில் அதிகமாக பயிரிடப்பட்டுள்ளது.

இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கண்வலி விதைகள் வெளிநாட்டில் சர்க்கரை, புற்றுநோய் உள்ளிட்ட முக்கிய நோய்களுக்கு மருந்து தயாரிக்க அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக ஒட்டன்சத்திரம் பகுதியில் மழையின் அளவு குறைவாகவே உள்ளதால் விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் மூலம் பயிர்களுக்கு தினமும் தண்ணீர் பாய்ச்சுகின்றனர். மேலும் கொரோனா எதிரொலியாக கடந்த ஆறு மாத காலமாக விவசாயம் செய்ய முடியாமலும் விவசாயம் செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியாமலும் விவசாயிகள் தவித்து வந்தனர்.
தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு மீண்டும் போக்குவரத்து சீராகி உள்ளதால் அதிக வருமானம் ஈட்டக்கூடிய செங்காந்தள் மலர் பயிரை விவசாயிகள் அதிகம் பயிரிட்டு வருகின்றனர்.

Tags : season , Ottanchatram, farmers
× RELATED கோக் ஸ்டுடியோ தமிழ் சீசன் 2-ன் புதிய பாடல் “தமிழ் வாழ்த்து” வெளியீடு