×

ராஜபாளையத்தில் மழைநீரில் மிதக்கும் அரசு மருத்துவமனை

ராஜபாளையம்: ராஜபாளையம் காந்திசிலை அருகே அரசு மகப்பேறு மருத்துவமனை உள்ளது. இங்கு தினந்தோறும் 300க்கு மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இதுமட்டுமின்றி அருகே உள்ள கிராமங்களைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்கள் பிரசவத்திற்கு இம்மருத்துவமனைக்கு தான் வருகின்றனர். கடந்த 2 நாட்களாக ராஜபாளையம் பகுதியில் மழை பெய்து வருவதால் அரசு மருத்துவமனை முழுவதும் மழைநீர் சூழ்ந்துள்ளது.

வெளியேற வழியின்றி தேங்கியுள்ள மழைநீரால் கொசு உற்பத்தியாகும் நிலை உள்ளது. மேலும் நடந்து செல்பவர்கள் வழுக்கி விழுந்து காயமடையும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு மருத்துவமனை முன்பு  வாறுகால்களை தூர்வாரி மழைநீர் உள்ளே வராமல் தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Government Hospital ,Rajapalayam , Rajapalayam, Government Hospital
× RELATED இந்த நாள் தேசிய தரச்சான்று பெற்ற அரசு...