×

ஜெயங்கொண்டம் சோழீஸ்வரர் கோயிலை சுற்றியிருந்த ஆக்கிரமிப்பு அதிரடி அகற்றம்: மடப்பள்ளி அமைக்க பக்தர்கள் கோரிக்கை

ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் சோழீஸ்வரர் கோயிலை சுற்றியிருந்த ஆக்கிரமிப்புகளை இந்து சமய அறநிலையத்துறையினர் அகற்றினர். அந்த இடத்தில் மடப்பள்ளி அமைக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பழமைவாய்ந்த சோழீஸ்வரர் சிவன் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில் பிரதோஷம், சிவராத்திரி உள்ளிட்ட விழாக்கள் சிறப்பாக நடைபெறும். கடந்த 25 ஆண்டுகளாக தனிநபர் ஒருவர், கோயிலுக்குள் உள்ள நந்தவன இடத்தில் 2,245 சதுர அடி இடத்தை ஆக்கிரமிப்பு செய்து அனுபவித்து வந்தார். இதையடுத்து ஆக்கிரமிப்பை அகற்றகோரி இந்து சமய அறநிலையத்துறைக்கு கோயில் நிர்வாகம் மற்றும் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதையடுத்து கோயில் சார்பில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தீர்ப்பு பெறப்பட்டது. இதையடுத்து நீதிமன்ற தீர்ப்பின்படி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கருணாநிதி தலைமையில் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்த இடத்தை மீட்டு கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு ரூ.50 லட்சம் என கருதப்படுகிறது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், ஆணையர்கள் ஜெயங்கொண்டம் செல்வம், திருமழபாடி மணிவேலன், ஆடுதுறை அகிலா, கோடாலிகருப்பூர் முரளிதரன், கங்கைகொண்ட சோழபுரம் சிலம்பரசன், அரியலூர் யுவராஜ், விக்ரமங்கலம் சரவணன், அரியலூர் அறநிலையத்துறை ஆய்வாளர் சட்டநாதன், வருவாய் ஆய்வாளர் சிவசக்தி, ஜெயங்கொண்டம் விஏஓ சிவகுமார், சப்இன்ஸ்பெக்டர்கள் வசந்த் முருகன், வருவாய் துறையினர் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், கோயிலில் தனிநபர் ஆக்கிரமிப்பு இடம் மீட்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. மீட்கப்பட்ட இடத்தில் சுற்றுச்சுவர் அமைத்து யாரும் உள்ளே செல்லாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மீட்கப்பட்ட இடத்தில் பழையபடி மீண்டும் நந்தவனம் அமைத்து மடப்பள்ளி அமைக்க வேண்டும் என்றனர்.

Tags : Removal ,Devotees ,shrine ,Jayankondam Choleswarar Temple , jayankondan , devotees, demand
× RELATED கேரளாவில் பெண் வேடமிட்டு ஆண்கள்...