×

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல்.!!!

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதாக வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது. அதைத் தொடர்ந்து சென்னையில் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய இடி மின்னலுடன் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சென்னையில் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் முட்டி வரை சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சென்னையின் பல பகுதிகளிலும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதற்கு காரணம் மொத்தமாக அடர்த்தியாக பெய்த கனமழை தான் என்று தெரிவிக்கப்படுகிறது.

நேற்று இரவு முதல் மழை பெய்து வரும் நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி, விருநகர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை, வளிமண்டல சூழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் கனமழை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகார் எண் அறிவிப்பு:

சென்னையில் தண்ணீர் தேங்கினால் பொதுமக்கள் 1913 எண்ணில் புகார் அளிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் தண்ணீரை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும்., சென்னை மாநகராட்சி பகுதிகளில் தேங்கிய மழை நீர் 2 மணி நேரத்தில் அகற்றப்பட்டது. வடிகால்கள் புதிதாக கட்டப்பட்டும், தூர்ந்து போனவை புதுப்பிக்கப்பட்டதால் மழைநீர் வடிய வழிவகை ஏற்பட்டது. தற்போது பெய்த மழையில் 3 முதல் 10 இடங்களில் தேங்கிய நீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நடமாடும் மருத்துக் குழுக்கள், பொது சமையல் அறை, அம்மா உணவகங்கள் தயாராக உள்ளது என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.


Tags : districts ,Kanchipuram ,Chennai ,Tiruvallur: Meteorological Department , Heavy rains will continue in 8 districts including Chennai, Kanchipuram and Tiruvallur: Meteorological Department.
× RELATED சென்னை, காஞ்சிபுரத்தில் முதியோர்கள்,...