×

வானூரில் பரபரப்பு சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புதுறை திடீர் ரெய்டு

வானூர்: விழுப்புரம் மாவட்டம் வானூரில் சார் பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு சார் பதிவாளராக (பொறுப்பு) வெங்கடேசன் மற்றும் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். மாவட்ட பதிவாளராக பாலசுப்பிரமணியம் உள்ளார்.
இந்த அலுவலகத்தில் இரவில்தான் பத்திரப்பதிவு வேலை நெடைபெறுவதாகவும், சரஸ்வதி பூஜைக்காக பணம் வசூலிப்பதாகவும் புகார்கள் எழுந்தன. இந்நிலையில் நேற்று மாலை சுமர் 4 மணியளவில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென அலுவலத்தில் நுழைந்து ரெய்டு நடத்தினர். அப்போது பதிவு செய்ய வந்த சுமார் 50 பேர் அலுவலகத்தின் உள்ளே மாட்டிக்கொண்டனர். பின்னர் சார் பதிவாளரிடம் விசாரணை நடத்தினர். இதில் கணக்கில் வராத பணம் ரூ.1 லட்சம் சிக்கியதாக தெரிகிறது. தொடர்ந்து அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர். இந்த திடீரென ரெய்டு அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.


Tags : office ,Vanur , Anti-Corruption Bureau raids office
× RELATED நீலாங்கரை சார்பதிவாளர் அலுவலகத்தில்...