பதிவுத்துறை தலைவர் சங்கர் பொறுப்பேற்பு

சென்னை: பதிவுத்துறை தலைவராக இருந்த ஜோதி நிர்மலாசாமி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு ஆணைய மேலாண்மை இயக்குனராக பணியிட  மாற்றம் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து, செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் சங்கர் பதிவுத்துறை தலைவராக நியமனம் செய்து தமிழக  அரசின் தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து அவர் சாந்தோமில் உள்ள பதிவுத்துறை தலைமை அலுவலகத்தில்  பதிவுத்துறை தலைவராக  நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு பதிவுத்துறை தலைவர் அலுவலக ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories:

>