×

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் ரூ.81.24 கோடியில் கட்டப்பட்ட 21 பாலங்கள்: முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்

சென்னை: நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் ரூ.81 கோடியே 24 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 21 பாலங்களை முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை கொரட்டூர் ரயில் நிலையம் அருகில் உள்ள ரயில்வே கடவு மாற்றாக, ரூ.21 கோடியே 96 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட சுரங்கப்பாதையை வீடியோ கான்பரன்சிங் மூலமாக திறந்து வைத்தார். மேலும் செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவாரூர், ராமநாதபுரம், தர்மபுரி, திருச்சி, அரியலூர், தென்காசி, திருநெல்வேலி, தஞ்சாவூர், கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ரூ.59 கோடியே 28 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டப்பட்டுள்ள பாலம் என மொத்தம் 81 கோடியே 24 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 21 பாலங்கள் மற்றும் ஒரு வரையறுக்கப்பட்ட சுரங்கப்பாதை ஆகியவற்றை முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், தலைமை செயலாளர் சண்முகம், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மை செயலாளர் கார்த்திக், தலைமை பொறியாளர் (நபார்டு மற்றும் கிராமச் சாலைகள்) செல்வன், தலைமை பொறியாளர் (பெருநகரம்) சுமதி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Tags : bridges ,Chief Minister ,Edappadi ,Minor Ports Department , 21 bridges constructed at a cost of Rs. 81.24 crore on behalf of Highways and Minor Ports Department: Chief Minister Edappadi inaugurated.
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...