×

அதிர்ச்சி தரும் துணைத்தேர்வு முடிவுகள் 10ம் வகுப்பில் தேர்ச்சி 22% பிளஸ்2 தேர்வில் தேர்ச்சி 12%: மாணவர்கள், பெற்றோர் கடும் அதிருப்தி

சென்னை: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்காக நடத்தப்பட்ட துணைத் தேர்வில் 10ம் வகுப்பு தேர்வில் 22 சதவீதமும், பிளஸ் 2 தேர்வில் 12 சதவீத தனித் தேர்வர்களும் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் மாணவர்கள், பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் மார்ச் மாதம் நடக்க வேண்டிய பொதுத் தேர்வுகளில் பிளஸ் 2 தேர்வு மட்டுமே நடந்து முடிந்த நிலையில், கொரோனா காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வு நடக்கவில்லை. இதையடுத்து பள்ளிகள் மூலம் பத்தாம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் தேர்ச்சி அடைந்ததாக அரசு அறிவித்தது. இதையடுத்து, பத்தாம் வகுப்பு பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வில் தனித் தேர்வர்களாக விண்ணப்பித்தவர்கள் மேற்கண்ட முறைப்படி தேர்ச்சி அறிவிக்காமல், அவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்தது.

அதன்படி செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் துணைத் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கான முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த முடிவுகளின் அடிப்படையில் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வை 39 ஆயிரம் பேர் எழுதினர். அவர்களில் 22 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல 40 ஆயிரம் பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். ஆனால் அவர்களில் 12 சதவீதம் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று தற்போது தெரியவந்துள்ளது. தமிழக அரசின் அறிவிப்பின்படி அல்லாமல் துணைத் தேர்வு நடத்தி, அரசு பாரபட்சமாக நடந்து கொண்டதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். அதனால் பள்ளி மாணவர்களுக்கு அறிவித்தது போல தனித் தேர்வர்களுக்கும் தேர்ச்சி அறிவிக்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.


Tags : class ,parents , Stunning by-election results pass 10th class 22% plus pass 2% 12%: Students, parents dissatisfied
× RELATED பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும்...