×

உள்ளாட்சி ஊழியர் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்

மதுராந்தகம்: மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில், கிராம நகர்ப்புற உள்ளாட்சி ஊழியர் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் நேற்று  நடந்தது. கூட்டமைப்பின் மாநில தலைவர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். மாநில அமைப்பாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட  தலைவர் தனுசு வரவேற்றார். மாவட்ட துணை தலைவர் பழனி, பொருளாளர் பரசுராமன், மதுராந்தகம் ஒன்றிய முன்னாள் செயலாளர் வேதாசலம்  உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கடந்த 16.3.2020 அன்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டபடி டேங்க் ஆபரேட்டர்களுக்கு 1,400, தூய்மை  காவலர்களுக்கு 1,000 கூடுதல் ஊதியம், துப்புரவு பணியில் 3 ஆண்டுகள் நிறைவு செய்தவர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் ஆகிய  அறிவிப்புகளுக்கான அரசாணை வெளியிட வேண்டும்.

அனைவருக்கும் 7வது ஊதியக்குழு விதிகளின்படி சம்பளம் வழங்குதல், பணிப் பதிவேடுகளை பராமரித்தல், தீபாவளி பண்டிகை முன்பணம் வழங்க  வேண்டும்.  துப்புரவு பணியாளர்கள் மற்றும்  டேங்க் ஆபரேட்டர்களுக்கு சீருடைகள், கையுறைகள், டார்ச் லைட், குடை வழங்குதல் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags : Local Employees Federation Consultative Meeting , Local Employees Federation Consultative Meeting
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...