×

இயல்புநிலை திரும்பியதால் சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு: கட்டுப்படுத்த அதிகாரிகள் ஆலோசனை

சென்னை: சென்னையில் தொழிற்சாலைகள், நிறுவனங்கள், வாகனங்கள் பெருமளவில் இயக்க துவங்கிய பிறகு படிப்படியாக காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பள்ளிகள் முதல் தொழிற்சாலைகள், வாகன போக்குவரத்து என அனைத்தும் நிறுத்தப்பட்டது. வாகனங்கள் இயங்காததால், அதிலிருந்து நச்சுகலந்த புகை வெளியேறுவதும் குறைந்தது. இதேபோல் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தொழிற்சாலைகள் இயங்காததால் நச்சுக்காற்று வெளியேறவில்லை. எனவே, ஊரடங்கு காலத்தில் சென்னையில் காற்று மாசுபாடு பெருமளவில் குறைந்திருந்தது.

இதையடுத்து ஊரடங்கு தளர்வு காரணமாக தொழிற்சாலைகள், அலுவலகங்கள், நிறுவனங்கள் அனைத்தும் தமிழகத்தில் செயல்பட துவங்கியுள்ளது. இதன்காரணமாக இத்தகைய இடங்களில் வேலை செய்வோர், தினசரி பணிக்கு செல்கின்றனர். மேலும் அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் உள்ளிட்டவையும் இயங்குகிறது. இதனால் ஊரடங்கு நேரத்தில் குறைந்திருந்த காற்று மாசுபாடு, தற்போது மீண்டும் அதிகரிக்க துவங்கியிருக்கிறது. படிப்படியாக அதிகரித்து வந்த காற்று மாசுபாடு, தற்போது மேலும் அதிகரித்துள்ளது. ஊரடங்குக்கு முன்பு இருந்த நிலையை எட்டியுள்ளது.

இது மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள தகவலின் மூலம் தெரியவந்துள்ளது. அதாவது, நாடு முழுவதும் காற்று மாசுபாடு குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கண்காணித்து வருகிறது. அந்தவகையில் சென்னையில் 4 இடங்களில் காற்றின் தரம் கண்காணிக்கப்படுகிறது. அவை முறையே ஆலந்தூர், மணலி கிராமம், மணலி, வேளச்சேரி ஆகும். இங்கு, காற்றின் தரம் குறித்து சோதனை நடத்தப்பட்டதில், தளர்வு வழங்கப்பட்ட பிறகு காற்று மாசுபாடு படிப்படியாக அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.அதாவது ஊரடங்குக்கு முந்தைய பிப்ரவரி 26ம் தேதி ஆலந்தூர் பஸ் ஸ்டாப்பில் காற்று மாசுபாடு 2.5 மைக்ரான் அளவு 31.88 ஆக இருந்தது. இது மார்ச் மாதத்திற்கு பிறகு குறைந்திருந்தது. பிறகு இயல்புநிலை திரும்பியவுடன் படிப்படியாக அதிகரித்து வந்த மாசு கடந்த அக்டோபர் 26ம் தேதி 30.74 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் ஒவ்வொரு இடத்திலும் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Chennai , Air pollution increase in Chennai due to return to default: Authorities advise to control
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...