×

மாணவர்களிடம் ஆர்வம் குறைந்ததா? இன்ஜினியரிங் கவுன்சலிங் முடிந்த நிலையில் கல்லூரிகளில் 55சதவீத இடங்கள் காலி: 20 கல்லூரிகளை தேர்வுசெய்யாத மாணவர்கள்; நிர்வாகங்கள் அதிர்ச்சி

சென்னை: பிஇ, பிடெக் படிப்பு மாணவர் சேர்க்கை கவுன்சலிங் முடிந்த நிலையில் மொத்தமுள்ள இடங்களில் 55.77 சதவீத இடங்களில் மாணவர்கள் சேராமல் காலி ஏற்பட்டுள்ளது. இதனால் கல்லூரியை எப்படி நடத்துவது என்பது தெரியாமல் நிர்வாகங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன. தமிழகத்தில் பிஇ, பிடெக் படிப்புகளில் இந்த ஆண்டு மாணவர்களை சேர்ப்பதற்கான கவுன்சலிங் கடந்த 1ம் தேதி தொடங்கியது. இதுவரை நான்கு சுற்று முடிவடைந்த நிலையில் நேற்றுடன் கவுன்சலிங் நிறைவடைந்தது. இதில் மொத்தம் 1 லட்சத்து 63 ஆயிரத்து 154 இடங்கள் உள்ளன. இதில் 71 ஆயிரத்து 195 இடங்களில் மட்டுமே மாணவ, மாணவியர் சேர்ந்துள்ளனர்.

மீதம் கல்லூரிகளில் உள்ள இடங்களை யாரும் தேர்வு செய்யவில்லை என்று தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.குறிப்பாக 1 லட்சத்து 57 ஆயிரத்து 689 இடங்களுக்கு நடந்த ஆன்லைன் கவுன்சலிங்கில் 69 ஆயிரத்து 749  இடங்கள் நிரம்பின. 87 ஆயிரத்து 940 இடங்கள் காலி ஏற்பட்டுள்ளது. மொத்த இடங்களில் வெறும் 44.23 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ள நிலையில் 55.77 சதவீத இடங்கள் நிரம்பிவில்லை என்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்த கவுன்சலிங்கில் அரசு பொறியியல் கல்லூரிகள் உட்பட 139 கல்லூரிகளில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பியுள்ளன. அரசு பொறியியல் கல்லூரிகள் உட்பட 267 பொறியியல் கல்லூரிகளில் 25 சதவீதத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இடங்கள் நிரம்பியுள்ளன.

322 கல்லூரிகளில் 50 மற்றும் அதற்கும் குறைவான இடங்களே நிரம்பியுள்ளன. 194 கல்லூரிகளில் 25 மற்றும் அதற்கும் குறைவான இடங்களும், 103 கல்லூரிகளில் 10 சதவீதம் மற்றும் அதற்கும் குறைவான இடங்களும், 64 கல்லூரிகளில் 5 சதவீதம் மற்றும் அதற்கும் குறைவான இடங்களும் நிரம்பியுள்ளன.இந்நிலையில், 67 கல்லூரிகளில் 75 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமான இடங்களும், 39 கல்லூரிகளில் 90 மற்றும் அதற்கு அதிகமான இடங்களும் நிரம்பியுள்ளன. வெறும் 13 கல்லூரிகளில் தான் 100 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன. இது தவிர, 20 கல்லூரிகளில் ஒரு இடத்தைகூட மாணவ, மாணவியர் தேர்வு செய்யவில்லை. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : colleges ,completion ,Administrations , Are students less interested? 55% vacancies in colleges after completion of engineering counseling: 20 students who did not opt for colleges; Administrations shocked
× RELATED புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு...