×

திமுக பிரமுகர் உதயகுமார் படத்திறப்பு: ஆவடி நாசர் பங்கேற்பு

ஆவடி: ஆவடி மாநகர திமுக பிரமுகர் எஸ்.உதயகுமாரின் திரு உருவ படத்திறப்பு விழா ஆவடியில் நடந்தது.   ஆவடி மாநகர திமுக முன்னாள்  பொருளாளரும், முன்னாள் மாவட்ட பிரதிநிதியுமான எஸ்.உதயகுமாரின் திரு உருவ படத்திறப்பு விழா ஆவடி, காந்தி நகரில் உள்ள இல்லத்தில்  நேற்று முன்தினம் நடந்தது. நிகழ்ச்சியில், திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் கலந்து கொண்டு உருவப்படத்தை திறந்து  வைத்தார்.

முன்னாள் அமைச்சர் க.சுந்தரம்,  பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, பூந்தமல்லி கிழக்கு ஒன்றிய செயலாளர் பூவை.ஜெயக்குமார், ஆவடி  மாநகரச் செயலாளர் ஜி.ராஜேந்திரன், அவைத் தலைவர் ருக்கு, நிர்வாகிகள் வக்கீல் கு.சேகர், பொன். விஜயன், பதாகை சிங்காரம், கா.மு.ஜான்,  நாராயணபிரசாத், நாகூர்கனி, சுப்பிரமணியன், வின்சென்ட், பாலா, ரமேஷ், யுவராஜ், குமார், சதீஷ், பெருமாள், கிருஷ்ணமூர்த்தி, இளங்கோ, சிவகுமார்,   அரி, ஜோன், நரேஷ், லோகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Pramukar Udayakumar Opening ,Avadi Nasser Participation , DMK Pramukar Udayakumar Opening: Avadi Nasser Participation
× RELATED திமுகவின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்