×

புரட்சி பாரதம் கட்சியின் திருவள்ளூர் மத்திய மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு கலைப்பு: தலைவர் பூவை எம்.ஜெகன் மூர்த்தி அறிவிப்பு

திருவள்ளூர் புரட்சி பாரதம் கட்சியின் திருவள்ளூர் மத்திய மாவட்ட நிர்வாக குழு கூட்டம் திருவள்ளூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட  தலைவர் சி.பி.குமார் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் கூடப்பாக்கம் இ.குட்டி வரவேற்றார். மாவட்ட நிர்வாகிகள் நயபாக்கம் டி.மோகன்,  வி.ஜி.ஞானமணி, ஜி.லோகு, கோபிசந்திரன், மாரிமுத்து, செஞ்சி ஜெ.ஜவகர், காட்டுப்பாக்கம் எஸ்.டேவிட், அப்பு, திராவிடன், சுரேஷ், பிரேம், தங்கசாமி  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   கூட்டத்தில் கட்சி தலைவர் பூவை எம்.ஜெகன்மூர்த்தி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் மாநில  நிர்வாகிகள் ஐ.ஏழுமலை, எம்.மாறன், வீரமணி, தளபதி செல்வம், பூண்டி எஸ்.பாபு, பூவை ஆர்.சரவணன், கே.எம்.தர், கே.எஸ்.ரகுநாத், பிரீஸ் பன்னீர்,  எம்.பி.வேதா, அலெக்ஸ் உள்பட பலர் கலந்து  கொண்டனர். முடிவில் மாரி நன்றி கூறினார்.

இந்த கூட்டத்தில் கட்சித் தலைவர் பூவை எம்.ஜெகன்மூர்த்தியின் உத்தரவின்பேரில் திருவள்ளூர் மத்திய மாவட்டத்தில் உள்ள அனைத்து பொறுப்புகள்  மற்றும் அனைத்து அணிகளின் பொறுப்புகள்  நேற்று முதல்  கலைக்கப்படுகிறது என்றும், அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ  படிப்பில் 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீட்டினை இந்த ஆண்டு நடைமுறைப்படுத்திட கோரியும், தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு அமல்படுத்தக்  கோரியும், மத்திய அரசின் தொழிற்சாலைகள் தனியார்மயம் ஆக்கப்படுவதை கைவிடக் கோரியும், பஞ்சமி நிலங்களை மீட்டு பஞ்சமர்களுக்கே  வழங்கக்கோரியும், தொடர்ந்து மூன்று கூட்டங்களில் கலந்து கொள்ளாதவர்களின் பதவிகளை பறிப்பது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags : Tiruvallur Central District ,Poovai M. Jagan Murthy ,Revolutionary Bharat Party ,announcement , Revolutionary Bharat Party's Tiruvallur Central District Administrators' Dissolution: Chairman Poovai M. Jagan Murthy's announcement
× RELATED புரட்சி பாரதம் கட்சியின் திருவள்ளூர்...