×

சென்னை இந்தியன் ஆயில் பவனில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம்

சென்னை: இந்தியன் ஆயில் நிறுவனம் நாடு முழுவதும் அக்டோபர் 27ம் தேதி முதல் நவம்பர் வரை பொது வாழ்வில் நேர்மையையும்,  நாணயத்தையும் வலியுறுத்தும் வகையில் `லஞ்சம் இல்லாத இந்தியா, வளமான இந்தியா’ என்ற கருப்பொருளில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு  வாரத்தை கடைப்பிடிக்கிறது. சென்னை இந்தியன் ஆயில் பவனில் காவல்துறை கண்காணிப்பாளர் (லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறை)  கே.சண்முகம், லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு-2020 வாரத்தின் நிகழ்ச்சிகளை இந்தியன் ஆயில் நிறுவனத்தின் செயல் இயக்குநர் அருப் சின்ஹா(மண்டல  சேவைகள்), இந்தியன் ஆயில் தமிழ்நாடு&புதுச்சேரியின் செயல் இயக்குநர் மற்றும் மாநில தலைவர் பி.ஜெயதேவன் மற்றும் விஜிெலன்ஸின்  தலைமை பொது மேலாளர் ஹைமா ராவ் மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பிற மூத்த அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி  வைத்தார்.

பின்னர் அருப் சின்ஹா பேசுகையில், “டிஜிட்டல் மயமாக்கல் நடவடிக்கைகள், வெளிப்படைத்தன்மையை அதிகரித்து ஊழலுக்கான வாய்ப்புகளைக்  குறைக்கிறது. அவை, மிகச்சிறந்த உற்பத்தி திறனையும் லாப அளவை அதிகரிப்பதுடன், நமது சிஸ்டம் மற்றும் நடைமுறைகளில் முறைகேடுகள்  நடப்பதையும் முறையற்ற வகையில் யாரும் பயன் பெறுகிற இடர்ப்பாடுகளை வெகுவாக குறைக்கின்றன” என்றார்.

Tags : Indian Oil Bhavan ,Chennai , Anti-Corruption Awareness Week at Indian Oil Bhavan, Chennai
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...