×

டிரம்ப் பிரசார இணையதளத்தைமுடக்கிய ஹேக்கர்

நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற சில தினங்களே இருக்கும் நிலையில், அதிபர் டிரம்ப்பின் பிரசார இணையதளத்தை மர்ம நபர்கள் முடக்கினர்.அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் 3ம் தேதி நடக்கிறது. இதற்கான, உச்சக்கட்ட பிரசாரத்தில் அதிபர் டிரம்ப்பும், அவரை எதிர்த்து போட்டியிடும் ஜோ பிடெனும் ஈடுபட்டுள்ளனர். இதனால், பிரசாரத்தில் கடைசிக்கட்ட அனல் பறக்கிறது. ‘டொனால்ட்ஜேடிரம்ப்.காம்’ என்ற இணையதளம், டிரம்பின் பிரசாரத்துக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இணையதளம் நேற்று திடீரென முடக்கப்பட்டது.

தங்கள் கைவரிசை என பின்னர் இது தெரிய வந்தது. அவர்கள், பிட்காயின்களை நன்கொடையாக அளிக்கும்படி டிரம்ப் சார்பில் கோரிக்கை வைப்பது போல், தகவல்களைப் பகிர்ந்திருந்தனர். கடந்த வாரத்தில் அரிசோனாவில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய டிரம்ப், அமெரிக்காவில் இணையதளப் பயன்பாடு பாதுகாப்பாக உள்ளதாகப் பெருமையுடன் கூறியிருந்தார்.


Tags : hacker ,Trump , The hacker who shut down the Trump campaign website
× RELATED தேர்தலில் தோற்றால் ரத்தகளறி ஏற்படும்:...