×

மயிலாடுதுறை வள்ளலார் கோயிலில் 1200 ஆண்டு பழமையான சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே 1200 ஆண்டு பழமை வாய்ந்த கோயில் வளாகத்தில் சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டது. மயிலாடுதுறை அருகே உள்ள விளநகர் பகுதியில் துறைகாட்டும் வள்ளலார் கோயில் உள்ளது. இந்த கோயில் 1959ம் ஆண்டு 25வது தருமை ஆதீனத்தால் குடமுழுக்கு செய்யப்பட்டது. அதன்பின் தற்போது 27வது சந்நிதானம் மாசிலாமணி சுவாமிகள் தலைமையில் அடுத்த மாதம் 4ம்தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் துரிதமாக நடக்கிறது. இந்நிலையில் கோயிலின் வடபுறத்தில் மழைநீர் சேமிப்புத்தொட்டி 2 கட்டப்பட்ட வருகிறது. இதற்காக 10 அடி ஆழத்தில் குழி தோண்டியபோது கோயிலின் உள்பிரகார சுவற்றை ஒட்டியவாறு மிகப்பழமை வாய்ந்த மெல்லிய செங்கற்களால் 4 அடிக்கு 4அடி கொண்ட சுவர் ஒன்று இருந்தது. அந்த சுவற்றை உடைத்து பார்த்தபோது சுரங்கம் ஒன்று இருந்தது தெரியவந்தது.

அதன் உள்ளே 10அடி தூரம்வரை சென்று பார்த்தபோது அங்கே ஒரு சுவர் உள்ளது தெரியவந்தது. இதுகுறித்து ஓய்வுபெற்ற தொல்லியல்துறை ஆய்வாளர் முத்துச்சாமி கூறுகையில், தஞ்சையை ஆண்ட சோழர்களின் இளம் வாரிசுகளுக்கு போர் பயிற்சி உட்பட அனைத்து பயிற்சிகளும் மிகவும் ரகசியமாக கோயில் வளாகத்தில் தான் அமைக்கப்பட்டு வந்துள்ளது. அனைத்து பயிற்சிகளும் முடிந்தபிறகு அவர்களுக்கு முடிசூட்டி அவர்களை அரண்மனைக்கு அழைத்து செல்வார்கள்.
மயிலாடுதுறைக்கு வடக்கே வரகடை என்ற இடத்தில் இரண்டு ஆறுகள் இணையும் இடத்தில் உள்ள கோயிலில் இதன் வரலாறு தெரிய வந்துள்ளது, இதே போன்றுதான் இந்த ஆலயத்திற்கு அடிக்கடி அரச வாரிசுகள் வருவதும் தங்குவதும் வாடிக்கையாக இருந்திருக்கலாம். ஆலயத்தில் இருக்கும் காலத்தில் ஆபத்து என்றால் இதுபோன்ற சுரங்கப்பாதையின் வழியே தப்பித்து செல்வதற்கான முன்ஏற்பாடுதான் இந்த சுரங்கப்பாதையாகும். இந்த சுரங்கப்பாதை சுமார் 10 அடி தூரம் உள்ளது என்றார்.



Tags : tunnel ,Mayiladuthurai Vallalar Temple , Discovery of a 1200 year old tunnel at the Mayiladuthurai Vallalar Temple
× RELATED பிரதமரின் அருணாச்சல் வருகைக்கு சீனா எதிர்ப்பு