குஷ்புவை கைது செய்தது; சட்டம் ஒழுங்கு சிறப்பாக செயல்படுவதற்கு எடுத்துக்காட்டு: அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

மதுரை: பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்க 30ம் தேதி வருகை தர உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு  வரவேற்பு அளிப்பது தொடர்பாக மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் அமைச்சர் செல்லூர் ராஜு நிருபர்களிடம் கூறுகையில் ‘முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் முதல்முறையாக முதல்வர் மதுரைக்கு வருகிறார். மதுரை கோரிப்பாளையத்தில் வரும் 30 தேதி முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு முதல்வர், துணை முதல்வர், 9 அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்கின்றனர். பின் பசும்பொன் செல்கின்றனர்.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்னைகளை யார் ஏற்படுத்தினாலும் கைது செய்யப்படுவார்கள். விதிமுறைகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட குஷ்புவை கைது செய்துள்ளோம். இதுவே சட்டம் ஒழுங்கு சிறப்பாக நடைபெறுவதற்கு எடுத்துக்காட்டு. தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்.  ஏற்கனவே இருந்த கட்சிகளுடன்  கூட்டணி தொடர்கிறது. கூட்டணியில் உள்ள நண்பர்களை நாங்கள் இழக்க விரும்பவில்லை, எங்களது கூட்டணியில் தொடர்வது குறித்து மற்ற கட்சியினர்தான் முடிவு எடுக்க வேண்டும். கமலுக்கு என்ன சிறப்பாக வருமோ அதில் தான் செல்ல வேண்டும், கமல் சிறந்த நடிகர். அதில் அவர் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>