×

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்

டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் காணொலியில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கை பற்றி முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட இருக்கிறது.


Tags : Union Cabinet ,Modi ,meeting ,Delhi , Union Cabinet meeting tomorrow chaired by Prime Minister Modi
× RELATED நஷ்டத்தில் இயங்கி வரும் லஷ்மி விலாஸ்...