சார்ஜாவில் அடுத்த 2 போட்டியிலும் சரவெடிதான்: கேப்டன் வார்னர் பேட்டி

துபாய்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் துபாயில் நேற்று இரவு நடந்த 47வது லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள்  மோதின. டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் 20 ஓவரில் 2 விக்கெட்இழப்பிற்கு 219  ரன் குவித்தது. கேப்டன் வார்னர் 34 பந்தில் 8பவுண்டரி,2 சிக்சருடன் 66, விருத்திமான் சஹா 45 பந்தில் 12 பவுண்டரி, 2 சிக்சருடன் 87 ரன் எடுத்து  ஆட்டம் இழந்தனர். மணீஷ்பாண்டே 44(31பந்து), வில்லியம்சன் 10 ரன்னில் களத்தில் இருந்தனர். இதையடுத்து களம் இறங்கிய டெல்லி அணியில் தவான் 0, ஸ்டோனிஸ் 5, ஹெட்மயர் 16, ரகானே 26, ஸ்ரேயாஸ் அய்யர் 7, ரிஷப் பன்ட் 36 ரன்னில் ஆட்டம் இழந்தனர்.

19 ஓவரில் 131 ரன்னுக்கு டெல்லி ஆல்அவுட் ஆனது. இதனால் 88 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் வெற்றி பெற்றது. அந்தஅணியின் ரஷித்கான் 4 ஓவரில் 7 ரன் மட்டுமே கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். சந்தீப் சர்மா 2 விக்கெட் கைப்பற்றினார். விருத்திமான் சஹா ஆட்டநாயகன் விருது பெற்றார். வெற்றிக்கு பின் கேப்டன் வார்னர் கூறியதாவது: முந்தைய போட்டியில் சேசிங்கில் தோற்றதால்  மிகவும் ஏமாற்றம் அடைந்தேன். இன்று டாஸ்  வென்றால் முதலில் பேட்டிங் செய்ய விரும்பினேன். டாஸை இழந்ததால் நான் ஏமாற்றமடையவில்லை. நார்ட்ஜே , ரபாடா என  2 உலகத்தரம்  வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இருப்பதால் முதலில் பேட்டிங் செய்யதிட்டமிட்ருந்தோம்.

நான் பொறுப்பை எடுத்து ஆடினேன். பேர்ஸ்டோவை வெளியேற்றி  சஹாவை உள்ளே கொண்டு வந்தது கடினமான முடிவு. வில்லியம்சனை 4வது வரிசையில் ஆட வைப்பது பலனளிக்கும்என  உணர்ந்தோம். சஹா  பவர்பிளேவில் ஆதிரடியாக ஆடியது நம்ப முடியாதது. ரஷீத்தைப் பொறுத்தவரை, அவர் பல விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், குறிப்பாக இங்குள்ள பனி  மற்றும் ஈரப்பதம் அவருக்கு கைகொடுக்கும். அடுத்த 2 போட்டியிலும்நாங்கள் சார்ஜாவில் ஆட உள்ளோம். துபாயிலேயே நாங்கள் 220 ஐ பெற முடிந்தால், நாங்கள் அங்கு(சார்ஜா) என்ன பெற முடியும் என்பது யாருக்குத் தெரியும், என்றார்.

டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறுகையில், தோல்வி நிச்சயமாக ஒரு பெரிய இழப்பு, ஆனால் இந்த நேரத்தில் நீங்கள் தடுமாற முடியாது. எங்களுக்கு இன்னும் 2 ஆட்டங்கள் உள்ளன. ஒரு வெற்றி நமக்குத் தேவை. அதற்காக நாங்கள் காத்திருக்கிறோம். பவர் பிளேவில் 70 ரன் கொடுத்தபோதே நாங்கள் ஆட்டத்தை இழந்தோம். பனியின் தாக்கம் இருக்கும் என்பதால் தான்  பந்துவீச்சை தேர்வு செய்தேன். இன்று நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. என்றார்.

எதிர்முனையில் வார்னர் இருப்பதால் ஆடுவது எளிது

விருத்திமான் சஹா கூறுகையில, இந்த ஆண்டு இரண்டாவது முறையாக எனக்கு வாய்ப்பு கிடைத்தது, அணிக்கான பவர் பிளேயில் நான்  வாய்ப்புகளைப் பெற்றேன். ஆரம்பத்தில் கொஞ்சம் பதற்றம் இருந்தது., அதன் பிறகு அது எங்கள் வழியில் சென்றது. மறுமுனையில் வார்னர்  இருக்கும்போது விளையாடுவது எளிது. பவர் பிளேயில் நான் எனது இயல்பான ஆட்டத்தை விளையாடுகிறேன்.

பிளேஆப் வாய்ப்பு கிடைக்குமா?

நேற்று 12வது ஆட்டத்தில் ஐதராபாத் 5வது வெற்றியை பெற்றது. 31ம்தேதி பெங்களூரு, நவ.3ம் தேதி மும்பையை எதிர்கொள்கிறது. இந்த 2  போட்டியில் வெற்றிபெற்றாலும் மற்ற போட்டிகளின் முடிவை பொறுத்தே பிளேஆப் வாய்ப்பு உள்ளது. டெல்லி 31ம் தேதி மும்பை, 2ம்  தேதிபெங்களூரை எதிர்கொள்கிறது. இதில் ஒன்றில் வெற்றிபெற்றால் பிளேஆப்பிற்கு தகுதி பெறலாம்.

Related Stories:

>