தமிழகத்தில் 2021ஆம் ஆண்டில் 23 நாட்கள் அரசு விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு..!!

சென்னை: தமிழகத்தில் 2021ஆம் ஆண்டில் 23 நாட்கள் அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து அலுவலகங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் பட்டியலில் குறிப்பிட்டுள்ள நாட்களில் அரசு விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2021ம் ஆண்டில் ஜனவரி 1ம் தேதி முதல் டிசம்பர் 25ம் தேதி வரை தொடர்ந்து 23 நாட்கள் அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த விடுமுறை நாட்களில் 6 நாட்கள் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வருகிறது. மேலும், அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். ஏனெனில், நடப்பு ஆண்டில் வந்த அரசு விடுமுறைகளில் தீபாவளி உட்பல பலவும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலேயே வந்துள்ளது. இதுமட்டுமல்லாமல்,இந்த ஆண்டு  பொது விடுமுறை வரும் பெரும்பாலான நாட்களும் வேலை நாட்களை கொண்டுள்ளது. இதனால் வேலைக்கு செல்வோரும், பள்ளி, கல்லூரி மாணவர்களும் இதனால் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories:

>