×

மும்பை-பெங்களூரு இன்று மோதல்: பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறுவது யார்?

அபுதாபி: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அபுதாபியில் இன்று இரவு 7.30மணிக்கு நடக்கும்48வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பைஇண்டியன்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் 11 போட்டிகளில் தலா 7ல் வென்றுள்ளன. இன்று வெற்றி பெறும்அணி பட்டியலில் முதலிடத்தை பிடிப்பதுடன் பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெறும். காயம் காரணமாக ரோகித்சர்மா இன்றும்ஆடமாட்டார்.

இரு அணிகளும் இதுவரை 26 போட்டிகளில் மோதி உள்ளன. இதில் மும்பை 16, பெங்களூரு 10ல் வென்றுள்ளன. நடப்பு சீசனில் மோதிய போட்டி டையில் முடிந்த நிலையில் சூப்பர் ஓவரில் பெங்களூரு வெற்றி பெற்றது. இரு அணிகளும்  பிளேஆப் சுற்றுக்குள் முதல் அணியாக தகுதிபெற போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

Tags : Mumbai ,clash ,Bangalore ,playoffs , Mumbai-Bangalore clash today: Who will qualify for the playoffs?
× RELATED ஐஎஸ்எல் கால்பந்து; கோவா-பெங்களூரு இன்று மோதல்