×

தாயின்றி தவித்த 3 பச்சிளம் மரநாய் குட்டிகள்: சேலம் வன உயிரியல் பூங்காவிற்கு அனுப்பி வைப்பு

மன்னார்குடி: மன்னார்குடி தாமரைக்குளம் பகுதியில் கடந்த மே மாதம் அழிந்து வரும் அரிய வகை இனமான மரநாய் ஒன்று 3 குட்டிகள் ஈன்று விட்டு இறந்து விட்டது. தாய் இறந்ததை அறியாத பச்சிளம் குட்டிகள் தாயின் மார்பில் பால் குடிக்க முயன்றது. ஒரு கட்டத்தில் பால் கிடைக்காமல் மூன்று மரநாய் குட்டிகளும் வித்தியாசமான முறையில் குரல் எழுப்பி அழுததை கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறை வீரர்கள் மூன்று மரநாய் குட்டிகளையும் பத்திரமாக மீட்டு மன்னார்குடி வனத்துறை அலுவல கத்திற்கு கொண்டு சென்று அங்கு வனச்சரக அலுவலர் ஜெயச்சந்திரனிடம் ஒப்படைத்தனர். தகவல் அறிந்த மாவட்ட வன அலுவலர் அறிவொளி தாயின்றி தவித்த மரநாய் குட்டிகளை பத்திரமாக பாதுகாக்குமாறு வனத்துறையினருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து இரும்பு குண்டு ஒன்றினை தயார் செய்த வனத்துறையினர் அதில் மரநாய் குட்டிகளையும் பாதுகாப்பாக வளர்த்து வந்தனர். அவ்வப்போது கால்நடை மருத்துவர்களை வரவழைத்து சிகிச்சையும் அளித்தனர்.

இந்நிலையில் கடந்த 5 மாதங்களாக மன்னார்குடி வனத்துறை அலுவலகத் தில் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வந்த 3 மரநாய் குட்டிகளையும் மாவட்ட வன அலுவலர் அறிவொளி உத்தரவின் பேரில் வனச்சரக அலுவலர் ஜெயச்சந்திரன் ஏற்பாட்டில் சேலம் மாவட்டம் குரும்பம்பட்டியில் உள்ள வன உயிரியல் பூங்காவிற்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டன. தாயின்றி தவித்த அழிந்து வரும் அறிய வகை இனமான மூன்று மர நாய் குட்டிகளை 5 மாத காலமாக பாதுகாப்பாக வளர்த்து பராமரித்த வனத்துறையினரை சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.

Tags : Salem Wildlife Sanctuary , Zoo, salem
× RELATED மேட்டூர் அணையின் மேற்குக்கரை பாசன...