×

ஊட்டி - முதுமலை சாலையோரங்களில் விலங்குகளின் படங்களுடன் பெயர் பலகை

ஊட்டி: நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் புலி, யானைகள், கரடி, மான்கள் உட்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. இந்த வனவிலங்குகளை காணவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்து செல்கின்றனர். குறிப்பாக, அண்டை மாநிலங்களில் இருந்து அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அதேபோல், சுற்றுலா பயணிகள் முதுமலை புலிகள் காப்பத்திற்கு சென்று யானை சவாரி மற்றும் விலங்குகளை காண ஆர்வம் காட்டுகின்றனர்.

பெரும்பாலான சுற்றுலா பயணிகள் ஊட்டியில் இருந்து மசினகுடி சாலை வழியாக முதுமலை செல்கின்றனர். ஊட்டியில் இருந்து முதுமலை செல்லும் சாலை நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இச்சாலையோரங்களில் தற்போது ஒளிரும் வகையில் விலங்குகளின் புகைப்படங்கள் அடங்கிய பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் விலங்குகளின் புகைப்படத்தில் அந்தந்த ஊர்களின் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. பிரமாண்டமான சைசில் இந்த போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பெயர் பலகைகளில் உள்ள விலங்குகளின் புகைப்படங்கள் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. குறிப்பாக, குட்டீஷ்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Tags : Ooty - Mudumalai , Ooty, Mudumalai
× RELATED தமிழ்நாட்டில் நீட் நுழைவுத் தேர்வை...