×

பண்டிகை காலம் என்பதால் பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், தனி நபர் இடைவெளியை கடைபிடியுங்கள் : மக்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்!!

சென்னை : பள்ளி, கல்லூரி, தியேட்டர்கள் திறப்பது குறித்து மருத்துவ குழுவுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் முதல்வர் பழனிசாமி இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் பேசிய முதல்வர்,கோவிட் வைரஸ் நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மாண்புமிகு அம்மாவின் அரசு பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகின்றது.  நோய்த் தொற்று குறைந்துள்ள நிலையில், பண்டிகை காலங்களில் மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்த்தல், விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்றவற்றை முனைப்புடன் செயல்படுத்த வேண்டும்.   
·     
மாண்புமிகு அம்மாவின் அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக, நாட்டிலேயே சிகிச்சை முடிந்து குணமானவர்கள் (6,75,518 நபர்கள்) 94.57% மேல் உள்ள மாநிலமாகவும்,  மிக குறைவான, இறப்புகள் அதாவது 1.53% உள்ள மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது.இறப்பு விகிதத்தை மேலும் குறைக்கும் விதமாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கோவிட் நோய் சிகிச்சை குறித்த நிலையான வழிமுறைகள் கடைப்பிக்கப்படுகின்றனவா? என்பதை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

பருவமழைக் காலத்தில் அவசர கால முகாம்களை தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். டெங்கு உள்ளிட்ட பருவகால நோய்களை தடுக்க முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.காலத்தில் அவசர கால முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கொரோனா சிகிச்சை மையங்களில் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.பள்ளி, கல்லூரி, தியேட்டர்கள் எப்போது திறப்பு?; மருத்துவ குழுவுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். கோயம்பேடு சந்தையில் குறு மற்றும் சிறு வியாபாரிகள் அனுமதிப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

தீபாவளி போன்ற பண்டிகைகள் வருவதால், பொதுமக்கள் பொது இடங்களில் கூடுவதை தொடர்ந்து கண்காணித்து, தொற்று ஏற்படாவண்ணம் முகக்கவசம், தனி நபர் இடைவெளி ஆகியவற்றை தவறாமல் கடைப்பிடிக்க ஒலிபெருக்கிகள் மூலம் விழிப்புணர்வினை தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.  அரசின் கோவிட் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து முழு ஒத்துழைப்பு வழங்கி வரும் பொதுமக்களுக்கும், செம்மையான முறையில் பணியாற்றி வருகின்ற அனைத்து அரசு அலுவலர்களுக்கும், பணியாளர்களுக்கும், எனது மனமார்ந்த நன்றிகளை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். பொது மக்களின் நலன் கருதி, உங்கள் அரசு எடுத்து வரும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொது மக்கள்  தொடர்ந்து முழு ஒத்துழைப்பினை நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : places ,Palanisamy , People, Chief Minister Palanisamy, request
× RELATED கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் 2 இடங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு..!!