×

விருதுநகரில் ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் ஆபீசில் ரெய்டு: 2.26 லட்சம் பறிமுதல்

விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குநர் அலுவலகம் உள்ளது. இங்கு உதவி இயக்குநர் விஷ்ணுபரன், ஒப்பந்த ஆணைகள் வழங்க பணம் வசூலிப்பதாக துணை ஆய்வுக்குழு அலுவலர், வட்ட வழங்கல் அலுவலர் பொன்ராஜ்க்கு தகவல் வந்தது. இதையடுத்து பொன்ராஜ் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மதியம் உதவி இயக்குநர் அறைக்குள் நுழைந்து அதிரடியாக சோதனை நடத்தினர்.  அப்போது உதவி இயக்குநர் விஷ்ணுபரனின்  டிரைவர் சரவணகுமாரிடம் இருந்து கணக்கில் வராத, 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளாக 2,26,500 பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Assistant Director ,Rural Development ,Virudhunagar , Raid on the office of the Assistant Director of Rural Development in Virudhunagar: 2.26 lakh confiscated
× RELATED அன்னவாசல் பேரூராட்சி அலுவலகத்தில்...