×

முதல்வர் தூத்துக்குடி சுற்றுப்பயணம் ரத்து

சென்னை: கொரோனா தடுப்பு பணிகள் குறித்து தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு கடந்த மாதமே முதல்வர் ஆய்வுப்பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அதிமுக முதல்வர் வேட்பாளர் பிரச்னை பெரிய அளவில் நடந்துகொண்டிருந்ததால் இந்த மாவட்டங்களில் கடந்த மாதம் நடைபெற இருந்த ஆய்வுப்பணிகள் ஒத்திவைக்கப்பட்டது.  இதையடுத்து, அக்டோபர் முதல் வாரம் இந்த மாவட்டங்களில் ஆய்வுப்பணிகள் மேற்கொள்ள இருந்தார்.ஆனால், முதல்வரின் தாயார் மரணம் அடைந்ததால் ஆய்வுப்பணி 2வது முறையாக ரத்து செய்யப்பட்டது.   இதனால், 3வது முறையாக நாளை(29ம் தேதி) தூத்துக்குடி செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.

இந்தநிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இதனால், முதல்வரின் தூத்துக்குடி சுற்றுப்பயணம் 3வது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம் தூத்துக்குடியில் ஆய்வு மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.

Tags : Chief Minister ,tour ,Thoothukudi , CM cancels Thoothukudi tour
× RELATED ஆளுநரை சந்திக்கும் முதலமைச்சரின் திட்டம் திடிரென ரத்து