×

வேலை வாய்ப்பற்றோர் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை: கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லூயிஸ்  வெளியிட்டுள்ள அறிக்கை. தமிழக அரசு சார்பில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை திட்டத்தின் கீழ் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், தோல்வியடைந்தவர்களுக்கு மாதந்தோறும் ரூ.600 வழங்கப்படுகிறது. அதேபோல் பிளஸ் 2 தேர்ச்சி, பட்டயம் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது.செங்கல்பட்டு மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற, காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடிவடைந்து இருக்க வேண்டும். இதில் மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பு மற்றும் வருமான வரம்பு கிடையாது. இதனை பெற, ஏற்கனவே வேலை வாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை பெற்றிருக்கக் கூடாது.

அனைத்து தகுதிகளும் உடையவர்கள் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், விண்ணப்பத்தை இலவசமாக பெற வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் வர வேண்டும். நேரில் வர முடியாதவர்கள் www.tnvelaivaaippu.gov.in//Empower என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் கல்வி, சாதி, ஆதார் அட்டை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம், மாற்றுத் திறனாளி அடையாள அட்டை,  வேலைவாய்ப்பு அடையாள அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றின் நகல்களை இணைத்து, நவம்பர் 30ம் தேதிக்குள் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த உதவித்தொகை பெறுவதால், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பெறப்படும் பரிந்துரைகள் எதுவும் பாதிக்காது என கூறப்பட்டுள்ளது.

Tags : Scholarship for Unemployed Transferees: Collector Information
× RELATED வேலை வாய்ப்பற்றோர் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை: கலெக்டர் தகவல்