×

இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் 1000 பேருக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி: காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் முடிவு

காஞ்சிபுரம்: இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், 1000 பேருக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடக்க உள்ளதாவ, காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் மதுராந்தகம் ஜிஎஸ்டி சாலையில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் நடந்தது. மாவட்ட அவைத் தலைவர் சேகரன் தலைமை வகித்தார். எம்பி செல்வம், எம்எல்ஏக்கள் வக்கீல் எழிலரசன், புகழேந்தி, ஆர்.டி.அரசு, மாவட்ட துணை செயலாளர்கள் வெளிக்காடு ஏழுமலை, தசரதன், வசந்தமாலா, பொருளாளர் கோகுலக்கண்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் நாகன், விஸ்வநாதன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமலிங்கம், எஸ்.கே.பி.சீனிவாசன், ஜனனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சிறப்பு அழைப்பாளராக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்து கொண்டு பேசினார்.

அப்போது கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அவர், கூறியதாவது: திமுக தலைவர் மு.கஸ்டாலினுடன் நடைபெற உள்ள கலந்துரையாடல் கூட்டம், மாவட்டத்தில் 29 இடங்களில் காணொளிக் காட்சி வாயிலாக நடக்கிறது. இதில் மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் பவளவிழா மாளிகையில் கட்சியினர் 50 பேருக்கு பொற்கிழி வழங்கப்படும். நவ.3ம் தேதி காஞ்சி தெற்கு மாவட்டம் வரும் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கட்சியினர் 1000  பேருக்கு பொற்கிழி வழங்க உள்ளார்.

மேலும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்குதல், சரிபார்த்தல்  பணிகளில் நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்றார். ஒன்றிய, நகர செயலாளர்கள் குமார், சன்பிராண்ட் ஆறுமுகம், பி.எம்.குமார், ஞானசேகரன், சத்சியசாய், ஸ்ரீதர், கண்ணன், தம்பு, ஏழுமலை, குமார், சரவணன், பேரூர் செயலாளர்கள் பாரிவள்ளல், இனியரசு, உசேன், விஜயகணபதி, அணிகளின் அமைப்பாளர்கள் அப்துல் மாலிக், அபுசாலி, தமிழ்ச்செல்வன், சோழனூர் ஏழுமலை,ந நாத்திகம் நாகராஜன், கலைச்செல்வி ஜெகநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Tags : Udayanithi Stalin ,event ,Kanchi South District DMK Executive Committee Meeting , Youth Secretary Udayanithi Stalin presents a bonfire to 1000 people: Kanchi South District DMK Executive Committee meeting results
× RELATED மயிலாடுதுறைக்கு நாளை வருகை தரும்...