×

பாஜ, விசிகவினர் போட்டிபோட்டு ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் உருவபொம்மை எரிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூரில் மாவட்ட பாஜ மகளிர் அணி சார்பில் மாவட்ட தலைவர்கள் ஜெமிலா விஜயபாஸ்கர், சோபா ஆகியோர் தலைமையில் விசிக தலைவர் திருமாவளவனை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஓபிசி மாநில தலைவர் ஜெ.லோகநாதன், மாவட்ட தலைவர்கள் ஏ.ராஜ்குமார், எஸ்.ராஜா ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் மாவட்ட பொது செயலாளர்கள் ரா.கருணாகரன், எம்.அஸ்வின், ஸ்ரீனிவாசன், ஏ.கே.மூர்த்தி, துணை தலைவர் வக்கீல் சண்முகம், ஆரியா சீனிவாசன், எம்.பன்னீர்செல்வம், வலசை இ.சேகர், எஸ்.கே.எஸ்.மூர்த்தி, அபிலாஷ், சதீஷ்குமார் மற்றும் 100க்கும் மேற்பட்ட மகளிரணியினர் கலந்துகொண்டனர். அப்போது திடீரென விசிக தலைவர் திருமாவளவன் உருவ பொம்மையை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்து மாலையில் விடுதலை செய்தனர்.

விசிகவினர் மறியல்: திருவள்ளூரில் மேற்கு மாவட்ட விசிக சார்பில் கட்சி தலைவர் திருமாவளவன் மீது அவதூறு பரப்பும் வகையில் பொய்யாக சித்தரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் பாஜவினரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் மு.வ.சித்தார்த்தன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் முத்தமிழன், மாவட்ட நிர்வாகிகள் திருவரசு, எஸ்.கே.குமார், யோகா, தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் பூண்டி ராஜா, இளஞ்செழியன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாகிகள் தளபதி சுந்தர், அருண் கௌதமன், செல்வம், செந்தில் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

அப்போது, எதிர்ப்புறத்தில் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த பாஜவினரை நோக்கி கண்டன கோஷங்களை எழுப்பி கொண்டு சென்றனர். பின்னர் திருவள்ளூர் போலீஸ் டி.எஸ்.பி துரைபாண்டியன், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் விசிகவினரை தடுத்து நிறுத்தினர். இதனால் விசிகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். மேலும் விசிக தலைவர் திருமாவளவன் மீது பொய்யாக சித்தரித்து, அவதூறு பரப்பி வரும் பாஜ மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் அசுவத்தாமன் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி திருவள்ளூர் நகரம் மற்றும் தாலுகா காவல் நிலையங்களில் விசிக மாவட்ட செயலாளர் மு.வ.சித்தார்த்தன் புகார் கொடுத்தார்.

ஆவடி: விசிக தலைவர் திருமாவளவன் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெறக்கோரி ஆவடி மாநகரம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகில் நேற்று காலை நடைபெற்றது. இதற்கு, தொகுதி செயலாளர் ஆவடி மு.ஆதவன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் சித்திக் அலி அனைவரையும் வரவேற்றார். இதில், திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவடி சா.மு.நாசர், மாநகர செயலாளர் ஜி.ராஜேந்திரன், அவைத்தலைவர் ருக்கு, மதிமுக மாவட்ட துணைச்செயலாளர் வக்கீல் அந்திரிதாஸ், காங்கிரஸ் மாநகர தலைவர் ஏ.ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Baja ,demonstration ,Visikavinar ,Thirumavalavan , Baja, Visikavinar rival demonstration: Thirumavalavan statue burning
× RELATED உதவியாளர்களிடம் ரூ.4 கோடி பறிமுதல்...