×

சரக்கு வாகனத்தில் தீ

ஆவடி: ஆவடி - பூந்தமல்லி சாலையில் ஆயில்சேரி பகுதியில் சாலையோரத்தில் உள்ள முட்புதரில் சரக்கு வாகனம் ஒன்று எரிந்த நிலையில் நேற்று முன்தினம் கிடந்தது. இதுபற்றி அப்பகுதி மக்கள் ஆவடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், ரோந்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அதில், எரிந்து கிடந்த சரக்கு வாகனம் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானது என தெரியவந்தது. அந்த வாகனத்தை அதற்குரிய டிரைவர் இல்லாததால், வட மாநில தொழிலாளர் ஒருவர் ஓட்டி வந்துள்ளார். அப்போது, அந்த வாகனம் டிரைவர் கட்டுப்பாட்டை மீறி சாலையில் தறிகெட்டு சாலையில் ஓடி உள்ளது. பின்னர், அங்கு உள்ள முட்புதரில் சரக்கு வாகனம் விபத்துக்குள்ளாகி நின்றது. அப்போது, அதிலிருந்த மின் பேட்டரியில் ஏற்பட்ட கசிவு காரணமாக வாகனம் தீப்பிடித்து எரிந்துள்ளது என்பது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின்பேரில் பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Fire in a truck
× RELATED இடர்பாடு, விபத்து குறித்து தகவல்...